தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக இன்புளூயன்சா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் அதிகளவில் சளி, காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். இந்த சூழலில், கொரோனா பாதிப்பு இன்று நீண்ட நாட்களுக்கு பிறகு 500-ஐ நெருங்கியது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழ்நாட்டில் மொத்தமாக 35 லட்சத்து 77 ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 429 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று கொரோனாவால் எந்தவித உயிரிழப்பும் ஏற்படவில்லை. தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 38 ஆயிரத்து 40 ஆக பதிவாகியுள்ளது. மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அதிகபட்சமாக 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோயம்புத்தூரில் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் கொரோனா தொற்றில் இன்றைய நிலவரப்படி 2 ஆயிரத்து 346 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோயம்புத்தூரில் 465 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருநெல்வேலி, சேலம், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் 100க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.