Tamil Nadu Coronavirus LIVE : தினசரி கொரோனா பாதிப்பு 5000க்கும் கீழ் குறைந்தது
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ஆந்திராவில் இன்று புதிதாக 2,224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,714 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். கொரோனாவால் இன்று 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 804 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,804ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 6 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 291 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 291 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 98 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 61 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 37 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8165 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 9, கோவையில் 7, கடலூர், ராணிப்பேட்டையில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் டெல்டா பிளஸ் பரிசோதனை மையம் 20 நாட்களில் அமைக்கப்படும். கொரோனா மூன்றாம் அலை ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள போதிய மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன - மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி கூடங்கள் 50% பேருடன் இயங்க அனுமதி அளிக்கப்படுவதாகவும், தனியார், கார்ப்பரேட் அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்படுவதாகவும் மம்மா அறிவித்துள்ளார்.
ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசி டோஸ் தடுப்பூசி கொடுப்பதாக மத்திய அரசு கூறியுள்ளதாக தெரிவித்த மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதுவரை 1.44 கோடி தடுப்பூசி டோஸ் பெறப்பட்டு 1.41 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடனுக்கும், சுகாதாரத்துறை உட்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.50,000 கோடி கடனுக்கும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 21% பயனாளிகள் மட்டுமே முதல் டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் . வெறும் 4.3% பயனாளிகள் மட்டுமே இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்
புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிப்படைந்தை இந்தோனேசிய, ரசியா ஆகிய இருநாடுகளில் கொரோனா தினசரி இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.
தடுப்பூசி டோஸ்களை போட்டுக் கொள்ள மகள்ளுக்கு எந்த தயக்குமும் இல்லை. தமிழ்நாடே தடுப்பூசி போட்டுக் கொள்ள மாநில மக்கள் அனைவரும் தயாராக உள்ளனர். ஆனால் தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்ட சான்றிதழ்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்கவும். உங்களின் முழு பெயர், வயது, இருப்பிடம் மற்றும் அடையாள அட்டையின் சில தகவல்களை மோசடி நபர்களுக்கு நீங்களே கொடுப்பது போன்றது என அடையாறு காவல்துறை துணை ஆணையர் தெரிவித்தார்.
அருணாச்சல் பிரதேசம், சிக்கிம், மணிப்பூர், மேகலாயா, நாகலாந்து, மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா சமூக பரவல் தொடர்ந்து அதிகரிக்கும் போக்கு காணப்படுகிறது. குறிப்பாக சிக்கிம், மேகாலயா, மிசோராம் ஆகிய மாநிலங்களில் வருடாந்திர தொற்று உறுதி விகிதம் ( weekly Positivity Rate) 10 சதவிகிதத்தை தாண்டியுள்ளது. மேலும், அநேக வடகிழக்கு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் விகிதமும் குறைந்து காணப்படுகிறது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதில், உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வகை 2 மற்றும் 3ல் உள்ள மாவட்டங்களுக்கிடையே திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ்/இ-பதிவு இல்லாமல் பயணிக்கலாம். வகை 1-ல் உள்ள மாவட்டங்களுக்கிடையேயும், வகை 2, 3 ஆகியவற்றில் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-1-ல் உள்ள மாவட்டங்களுக்கும் திருமணம் சார்ந்த போக்குவரத்துக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கப்படும். வகை-1ல் உள்ள மாவட்டங்களிலிருந்து வகை-2, 3-ல் உள்ள மாவட்டங்களுக்கு திருமணத்திற்காக பயணிக்கவும் இ-பாஸ் பெறவேண்டும்
வகை 2 மாவட்டங்களில், துணிக்கடைகள், நகை கடைகள் காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கப்படும்.
பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மேற்படி புதிய தளர்வுகளை அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்
தமிழ்நாடு அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு இன்று ( 28-6-2021) முதல் நடைமுறைக்கு வருகிறது. தமிழ்நாடு மூன்று வகை மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டு ஊரடங்கு நடைமுறைகள் அமல்படுத்தப்படுகின்றன.
வகை 1 - (11 மாவட்டங்கள்) : கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்
வகை 2 - (23 மாவட்டங்கள்) :அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.
வகை 3 - (4 மாவட்டங்கள்) - சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 804 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,895 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,804ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 70 ஆயிரத்து 678 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 6 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 291 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 308 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 291 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 98 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,388 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 61 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 37 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 4 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8165 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 9, கோவையில் 7, கடலூர், ராணிப்பேட்டையில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -