Tamil Nadu Coronavirus LIVE: தமிழ்நாட்டில் இன்று 4506 பேருக்கு கொரோனா

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 Jun 2021 08:04 PM
தமிழ்நாட்டில் இன்று 4506 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 506 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,62,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,506 ஆக அதிகரித்துள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 79 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 529 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 257 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 275 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 257 ஆக உள்ளது.


கொரோனாவால் மேலும் 113 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,619 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 79 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 34 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 14 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8175 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை 15, கோவை 12, சேலம் 9, திருச்சி 8, திருப்பூரில் 7 பேர் உயிரிழந்தனர். 

டெல்லியில் இன்று 94 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 94 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்  240 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 6 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் நிலவரம்

நாடு முழுவதும் 18-44 வயதுக்குட்பட்ட பயனாளிகளில் 20,87,331 பேர் மட்டுமே இரண்டு தடுப்பூசி டோஸ்கள போட்டுக் கொண்டுள்ளனர். 


கொரோனா தொற்றால் 3,499 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளனர் -சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன்

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றால் 3,499 குழந்தைகள் தாய் அல்லது தந்தையை இழந்துள்ளதாக தமிழ்நாடு சமூக நலத்துறை அமைச்சர் பி.கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா

டெல்டா வகை கொரோனா பரவலால் இங்கிலாந்து நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 58% அதிகரித்துள்ளது. தீவிர பாதிப்புகளால் மருத்துவமனையில் சேரும் விகிதம் 10 சதவிகிதமும், இறப்பு எண்ணிக்கை 72 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.      


 


 


ஆல்பா, டெல்டா வகை கொரோனா தொற்றுக்கு எதிராக கோவாக்சின் செயல்படுகிறது

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலான ஐசிஎம்ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பு மருந்து புதிய உருமாரியான ஆல்பா, டெல்டா வகை கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பை தருவதாக 'U.S.’ National Institute of Health' முகமை வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவித்தது.              

மத்தியத் தொகுப்பில் இருந்து 98% தடுப்பூசியை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.      
மத்திய தொகுப்பில் இருந்து பெறப்பட்ட தடுப்பூசிகளில் 98 சதவிகித தடுப்பூசியை தமிழ்நாடு பயன்படுத்தியுள்ளது.      

 

பெறப்பட்ட தடுப்பூசி டோஸ்கள் : 1,46,37,140

தடுப்பூசி நிர்வகிக்கப்பட்ட எண்ணிக்கை : 1,43,02,200    

 


நீதித்துறை இயல்பு நிலைக்கு திரும்ப நடவடிக்கை - சென்னை உயர்நீதிமன்றம்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை குறைந்து வரும் நிலையில்,சென்னை உயர்நீதிமன்றம் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை இயல்பு நிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் திறப்பால் கொரோனா பரவல் அதிகரித்தது.

இங்கிலாந்து நாட்டில் பள்ளிகள் திறப்புக்குப் பிறகு, 10 -12 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.       


 


கொரோனா தொற்றின் மூன்றாம் அலை பாதுகாப்பு நடவடிக்கைக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, கொரோனா தொற்றின் மூன்றாம் அலை தொடர்பான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து  தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டார்

கொரோனா தினசரி செய்திக் குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக சேர்க்கப்பட்டது

நேற்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட கொரோனா தினசரி செய்திக் குறிப்பில் மயிலாடுதுறை மாவட்டம் புதிதாக சேர்க்கப்பட்டது.  


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 20,061 கொரோனா தொற்று பாதிப்புகளும், 19,501 குணமடைந்தவர்களின் எண்ணிகையும், 247  கொரோனா இறப்பு எண்ணிக்கையும் மயிலாடுதுறை மாவட்ட கணக்கில் சேர்க்கப்பட்டது.     

கடந்த 24 மணி நேரத்தில்  20,320 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில்  20,320 பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.


கடந்த 24 மணி நேரத்தில் 45,951 புதிய பாதிப்புகள்

கடந்த 24 மணி நேரத்தில் 45,951 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. மேலும், கொரோனா தொற்றுக்காக மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 5,37,064-ஆகக் குறைந்துள்ளது.  


 

கொரோனா தொற்றின் 2 வது அலையில் தமிழகத்தில் 51 மருத்துவர்கள் மரணம் - ஐ.எம்.ஏ அறிக்கை.

கொரோனா தொற்றின் 2-வது அலையில் தமிழகத்தில் 51 மருத்துவர்கள் மரணம் - ஐ.எம்.ஏ அறிக்கை.


Background

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 506 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,62,622 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,506 ஆக அதிகரித்துள்ளது.


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.