Tamil Nadu Coronavirus LIVE : கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து டெல்லியில் நாளை முதல் ஹோட்டல்களை திறக்கவும், ஊரடங்கு விதிகளை பின்பற்றி நாளை முதல் திருமண மண்டபங்களை 50 பேருடன் திறந்து நடத்த அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. டெல்லியில் இன்று மேலும் 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 4 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே அமைந்துள்ள கலியாம்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் காப்பகத்தில் 33 குழந்தைகள் உட்பட 40 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 127 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,63,817 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,127ஆக அதிகரித்துள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 732 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 308 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8161 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9, கோவை, திருச்சியில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள 2 தவணைகள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியது அவசியம்; முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தி இருந்தால் 33 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இரண்டாவது தவணை போட்டிருந்தால் 90 சதவீதம் பாதுகாப்பு கொண்டதாக இருக்கும் என மருத்துவ வல்லுநர்கள் கூறினர்.
நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு மருந்தை தயங்காமல் செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். மேலும், தடுப்பு மருந்து குறித்த வதந்திகளை புறக்கணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மதுரையில் டெல்டா பிளஸ் நோய்த் தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்த ஒருவர் உயிரிழந்தார். தமிழ்நாட்டில், தற்போது வரை 9 பேருக்கு டெல்டா பிளஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9 பேருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்தார். மக்கள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களில் கொரோனா தினசரி நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. குறிப்பாக, மகாராஷ்ட்ராவில் கடந்த 24 மணிநேரத்தில் ஏற்பட்ட பாதிப்பு அதற்கு முந்தைய நாளை விட 2.2 % கூடுதலாகும்.
நாட்டில், தொடர்ந்து 45-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 57,481 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2021, மே 10ம் தேதி 37,45,247 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது 5,81,337 ஆகக் குறைந்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில் 14,228 சரிந்துள்ளது
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 49,701 பேர் புதிதாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக அன்றாட புதிய பாதிப்புகள் 50 ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளது. இருப்பினும், ஜூன் 25ம் தேதி பாதிப்பை விட கடந்த 24 மணி நேரத்தில் 933 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 127 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,63,817 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,127ஆக அதிகரித்துள்ளது. இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 65 ஆயிரத்து 874 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 732 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 308 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 314 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 308 ஆக உள்ளது.கொரோனாவால் மேலும் 91 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,290 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 64 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 27 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8161 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னையில் 9, கோவை, திருச்சியில் தலா 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -