Tamil Nadu Coronavirus LIVE : தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 26 Jun 2021 09:47 PM
தமிழ்நாட்டில் புதிதாக 5415 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 5 ஆயிரத்து 415 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,70,963 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 5,415 ஆக உள்ளது. அதிகபட்சமாக வேலூரில் ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 19 பேர் உயிரிழந்தனர். 

டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த கொரோனா எண்ணிக்கை இதுவாகும்.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 85 பேருக்கு மட்டும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தாண்டின் மிகக் குறைந்த எண்ணிக்கை இது எனக் கூறப்படுகிறது. டெல்லியில் மேலும் 158 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட நிலையில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் அவசியம்

டெல்டா பிளஸ் வைரஸ் மிக விரைவாக பரவுவதால், 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் கூட மாஸ்க் அணிய வேண்டும். மக்கள் காற்றோட்டமான இடங்களில் இருப்பதுடன், முகக் கவசத்தையும் தவறாது அணிய வேண்டும். பல ஏழை நாடுகளில் தடுப்பூசி போடவில்லை என்பதால் உலகளவில் டெல்டா வைரஸ்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் - உலக சுகாதார நிறுவனம்

27 மாவட்டங்களில் பேருந்துகள் இயக்க அனுமதி

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டிருந்தார். இதில், மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.


இந்நிலையில், வரும் 28ஆம் தேதி முதல் 50 சதவிகித பயணிகளுடன், ஏற்கெனவே அனுமதித்துள்ள 4 மாவட்டங்களுடன் கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்துகளை தமிழ்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், இராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர், விருதுநகர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாவட்டத்திற்குள்ளும், மாவட்டங்களுக்கு இடையேயும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 27 மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டதால் தொலைதூர பேருந்துகள் இயக்கப்படும். முகக் கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி ஆகியவற்றை பயணிகள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Delta Plus Varaint: பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளனர்.

புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் முழுமையாக குணமடைந்துள்ளதாக  நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

தடுப்பூசியை முழுமையாக போட்டுக் கொண்டவர்களுக்கு பரிசோதனை இல்லை - அசாம்

கொரோனா நோய்த் தொற்று தடுப்பு மருந்தை முழுமையாக செலுத்திக் கொண்டவர்களுக்கு விமான நிலையங்களில் மேற்கொள்ளப்படும் கோவிட் நோய் தொற்றுக்கான பரிசோதனையிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அஸ்ஸாம் மாநில அரசு அறிவித்துள்ளது

174 மாவட்டங்களில் புதிய உருமாறிய டெல்டா வகை கொரோனா நோய்த் தொற்று

நாடுமுழுவதும் 174 மாவட்டங்களில் புதிய உருமாறிய டெல்டா வகை நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1௦ மாவட்டங்களில் டெல்டா பிளஸ் வகை கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.           


18-44  வயது பயனாளிகளில் 8.04 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி

நாடு முழுவதும் 18-44  வயது பயனாளிகளில் 8.04 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளது. 


கொரோனா தடுப்பூசியில் புதிய சாதனை

தமிநாட்டில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் (ஜூன் 19-25) 20,51,279 பேருக்கு கொரோனா தடுப்பூசி டோஸ்கள் நிர்வகிக்கப்பட்டுள்ளன. இது, மாநிலத்தின் ஒரு வாரத்தில் போடப்பட்ட அதிகப்பட்ச எண்ணிக்கையாகும். 



        

8 மாவட்டங்களில் கொரோன உயிரிழப்புகள் பதிவாகவில்லை

திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, தென்காசி, திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் 5௦௦க்கும் குறைவானோர் மட்டுமே கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 


8 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை.     

தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 50,000க்கும் கீழ் குறைந்துள்ளது

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 48,768 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு, தினசரி கொரோனா பாதிப்பு முதன்முறையாக 50,000க்கும் கீழ் குறைந்துள்ளது. 



குழந்தைகளுக்கு 'Covovax' தடுப்பூசி - சீரம் நிறுவனத்தின் புதுமுயற்சி

தனது Covovax தடுப்பூசியை குழந்தைகளிடம் பரிசோதனை மேற்கொள்ள மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்க இருப்பதாக சீரம் நிறுவனம் தெரிவித்தது.   


சீரம் நிறுவனம் இரண்டு கோவிஷீல்டு: அஸ்ட்ரா ஜெனிகா /ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் இந்திய சீரம் மையம் ‘கோவிஷீல்டு’ தயாரித்து வருகிறது. இதற்கிடையே, அமெரிக்காவின் 'Novavax' என்று நிறுவனத்துடன் இணைந்து தொழில்நுட்ப பரிமாற்றம் மூலம் 'Covovax' என்ற தடுப்பூசியை சீரம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான, மூன்றாம் கட்ட பரிசோதனை கடந்த 18ம் தேதி தொடங்கயது.       

தொற்று உறுதி விகிதம் (Weekly Positivity Rate) 3 சதவிகிதமாக குறைந்தது

இந்தியாவின் வருடாந்திர தொற்று உறுதி விகிதம் (Weekly Positivity Rate) 3 சதவிகிதமாக குறைந்தது. 

டெல்டா பிளஸ் நோய்த் தொற்றுக்கு முதல் பலி

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா டெல்டா பிளஸ் நோய்த் தோற்றால் ஒருவர் உயிரிழந்தார். நாடு முழுவதும் 48 டெல்டா பிளஸ் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகபட்சமாக 21 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.             

3-வது அலையின் தாக்கம் குறைவாக இருக்கும் - ஐசிஎம்ஆர்

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் முதல் அலையை விட குறைவானதாக இருக்கும் என்று ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தர்போது வரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, குறைந்தபட்ச பாதுகாப்பை (தடுப்பூசி)  உறுதி செய்தால், மூன்றாவது அலையின் சேதத்தை கணிசமாக குறைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.               

Background

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளுடன் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு  வரும் ஜூலை 5ஆம் தேதி வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்பு தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் துணிக்கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.