Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் 4230 புதிய பாதிப்புகள்
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,810 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,230 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 992 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 238 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 238 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 74 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 30, கோவை, புதுக்கோட்டையில் தலா 7, சென்னையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 18 பேர் உயிரிழந்தனர்.
கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கோவின் இணையதளம், தடுப்பூசி மையங்கள் மூலம் கர்ப்பிணிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை இன்னும் ஓயவில்லை. ஒடிசா, மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முதல் கொரோனா பாதிப்பு விகிதம் 13 சதவீதம் குறைந்துள்ளது - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
கேரளா, அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மணிப்பூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், அங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்க நிபுணர் குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கில் 3 வகையாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களை ஒன்றாக்கி தளர்வுகள் தரவும், கொரோனா தொற்று குறைவதால் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகள் தரவும் தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் தொடர்ந்து 50வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைந்துவருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,384 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,331 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அமெரிக்காவில் டெல்டா வகை கொரோனா தொற்று பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. நாட்டில் 3ல் 2 பயனாளிகள் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனர். தடுப்பூசி குறைவாக போட்டுக் கொண்ட பகுதிகளில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் 36 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் குறைவான கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக தஞ்சாவூர் மாவாட்டத்தில் 23 பேரும், அதைத் தொடர்ந்து கோயம்பத்தூர் மாவட்டத்தில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று நிலவரம்:
குணமடைந்தோர் -97.01%
பாதிக்கப்பட்டோர் -1.67%
இறப்பு எண்ணிக்கை விகிதம் -1.31%
சென்னை மாநகராட்சியில் கொரோனா தொடர்பான சந்தேகங்கள் மற்றும் ஆலோசனைகளுக்கு Whatsapp Video Call-மூலம் மருத்துவரின் கருத்துகளைப் பெறலாம். தொடர்புகொள்ள வேண்டிய எண்:
9498346510, 9498346511, 9498346512, 9498346513, 9498346514
கோயம்பத்தூர் மாவட்டத்தில் இன்று கோவிஷீல்டு போடப்படும் தடுப்பூசி மையங்கள் குறித்த விபரங்கள்
மீண்டும் தடுப்பூசிகள் கையிருப்பில் வந்தமையால் பெருநகர சென்னை மாநகராட்சி தடுப்பூசி முகாம்கள் இன்று (02/07/2021) வழக்கம்போல் இயங்கும். ஆன்லைன் முன்பதிவு கிடையாது. நேரில் வந்து செலுத்திக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பபடும் (Total Positivity Rate) விகிதம் 2.7 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,63,654 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், 4,480 பேர் மட்டுமே நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைக் கடந்துள்ளது .கடந்த 24 மணி நேரத்தில் 853 இறப்புகள் பதிவாகியுள்ளன. இதன்மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 4,00,312 ஆக அதிகரித்துள்ளது.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 4 ஆயிரத்து 230 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,60,810 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 4,230 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 88 ஆயிரத்து 407 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 32 ஆயிரத்து 992 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 238 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 249 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 238 ஆக உள்ளது.
கொரோனாவால் மேலும் 97 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32,818ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 74 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8196 பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூர் 30, கோவை, புதுக்கோட்டையில் தலா 7, சென்னையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 18 பேர் உயிரிழந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -