Coronavirus LIVE Updates : தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 17 Jul 2021 06:50 PM
தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590-ஆக சரிவு..

தமிழ்நாட்டில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 28,590-ஆக சரிவு..

சென்னையில் இன்று 137 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது

சென்னையில் இன்று 137 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது

தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று..!

தமிழகத்தில் மேலும் 2205 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பாராட்டிய பிரதமர் மோடி

தமிழக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பிரதமர் மோடி பாராட்டியதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறினார் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்தார். 11 புதிய மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்குவது குறித்து விரைவில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்தார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊரடங்கு அறிவிப்புகள்

திருவள்ளூர் மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி  காலை 6 மணி வரையிலும் ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.


அகில இந்திய அளவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம்
அகில இந்திய அளவில் கோவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் விவரம். தமிழ்நாட்டில் 1 கோடி, 90 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.   

கொரோனா தொற்று உறுதி விகிதம்

தமிழ்நாட்டில் மாவாட்ட வாரியான கொரோனா தொற்று உறுதி விகித நிலவரம். சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர். காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்று உறுதி விகிதம் 1%க்கும் குறைவாக உள்ளது.      



100% தடுப்பூசி போடப்படும்வரை இலவசமாக முகக்கவசம் வழங்க வேண்டும் - ரவிக்குமார் எம்பி

தடுப்பூசி கிடைப்பதில் தாமதம் நேர்வதால் முகக்கவசம் அணிவது மட்டுமே தற்போதுள்ள பாதுகாப்பு. நகர்ப்புற கிராமப்புற ஏழை மக்களுக்கு 100% தடுப்பூசி போடப்படும்வரை இலவசமாக முகக்கவசம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர்  நடவடிக்கை எடுக்கவேண்டும் என விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் தெரிவித்தார்.    

India Covid-19 Case Daily updates: நாடு முழுவதும் 38,079 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 38,079 பேர் கொரோனாவால் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 43916 பேர் கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குனம்டைந்துள்ளனர்.இதன் மூலம், குணமடைவோர் எண்ணிக்கை 97.31% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 560 கொரோனா இறப்பு எண்ணிக்கையை இந்தியா பதிவு செய்தது.     

Background

தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கான தேவை மிகவும் அதிகரித்துள்ளது. எனினும், பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், மாநிலத்துக்கான ஒதுக்கீடு மிகவும் குறைவாகவே உள்ளது. இந்த நெருக்கடியைச் சமாளிக்க, சிறப்பு ஒதுக்கீடாக ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் வைத்தார்.    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.