தமிழ்நாட்டில் பொது இடங்களில் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தியுள்ளனரா என்பதை பள்ளி, கல்லூரி, கடைகள், சந்தைகள், தெருக்களில் உறுதி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கூடும் இடங்களில் தடுப்பூசி செலுத்தியது குறித்து அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள், விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், கடை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் இன்று 1,02,383 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 772 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 120 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 13 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். 884 பேர் சிகிச்சை முடித்துக் கொண்டு வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்