Omicron BF7 Symptoms: அச்சுறுத்தும் புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் என்ன..? பாதுகாப்பு நடவடிக்கைகள் என்ன?

ஒமிக்ரான் வகையின் BA.5, BF.7 மாறுபாடு, ஏற்கனவே தொற்று பாதித்தவர்களை மீண்டும் தாக்கும் தன்மை கொண்டது. மேலும் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் மீண்டும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Continues below advertisement

ஒமிக்ரான் வகையின் BA.5, BF.7 மாறுபாடு, ஏற்கனவே தொற்று பாதித்தவர்களை மீண்டும் தாக்கும் தன்மை கொண்டது. மேலும் தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் மீண்டும் பாதிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

Continues below advertisement

தேவையில்லாமல் கூட வேண்டாம்:

சீனாவில் உச்சமடைந்து வரும் உருமாறிய BF.7 வகை கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது. குஜராத்தில் 3 பேருக்கும் ஒடிசாவில் ஒருவரும் உருமாறிய BF.7 கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. 

சீனாவைப்போல், பல நாடுகளில் உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.  இதனால் இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி,  திருமண விழாக்கள், அரசியல் நிகழ்வுகள், சமூக கூடங்கள் என பொது இடங்களில் மக்கள்  தேவையில்லாமல் கூட வேண்டாம் எனவும் சர்வதேச நாடுகளுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஐஎம்ஏ ( IMA) அறிவுறுத்தியுள்ளது.  தற்போது பண்டிகை காலங்களும் நெருங்கி வருவதால் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும்.

சீனாவில் அதிகரிக்கும் பாதிப்பு:

இதையடுத்து, சானிடைசரைக் கொண்டு தொடர்ந்து கைகளைக் கழுவவும், காய்ச்சல், தொண்டை வலி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர்களை அணுக வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் ஓமிக்ரான் bf7 மாறுபாடு சீனாவில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேகம் பரவும் தன்மை கொண்டதால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சீனாவில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோரை இது பாதித்துள்ளது. இது உலக நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 3-4 நபர்களுக்கு இந்த ஓமிக்ரான் bf7 கொரோனா வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார துறை அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் bf7 மாறுபாடு மற்ற மாறுபாடுகளை விட மிகவும் வேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது என தரவுகளின்படி தெரிய வந்துள்ளது. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் புற்றுநோய், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், இதயம் அல்லது சிறுநீரகப் பிரச்சனைகள் போன்ற நோய்களைக் கொண்டவர்கள் உட்பட, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் அல்லது நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் தாக்கக்கூடிய அபாயம் அதிகம் உள்ளது.  

அறிகுறிகள்:

ஒமிக்ரானின் துணை மாறுபாடு BF.7 இன் அறிகுறிகள் மற்ற மாறுபாடுகளின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். சளி, தொண்டை வலி/புண், காய்ச்சல், இருமல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை சில பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், இணை நோயாளிகளுக்கு இந்த வைரஸ் தொற்றினால் தீவிர நோய்களை உருவாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவிக்கின்றனர்.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என வரிசையாக பண்டிகைகள் கொண்டாடப்படுவதால் மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் , சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement