Long Covid நோய்க்கான அறிகுறிகளை மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் அலை அலையாய் பரவி மக்களை கொன்று ஓய்திருக்கிறது. ஆனாலும், இன்றைக்கும் தொற்று பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து இருந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் உலகம் மீண்டும் தன் இயல்புக்கு திரும்ப முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் உலக நாடுகள் மருத்துவக் குழு கண்டுபிடித்த, கொரோனா தடுப்பூசிகளைக் கொண்டு தொற்று பாதிப்பினால் ஏற்படும் உயிரிழப்பினை தடுக்க பெரும் முயற்சியில் ஈடுபட்டு மக்களைக் காத்தது. ஆனால், தொற்று பரவல் அதிகமாவதும், குறைவதும் மக்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது என்பதை நாமும் உணர வேண்டும். இரண்டு தடுப்பூசிகளும் போட்டுவிட்டோம், என்ற எண்ணத்தில் தொற்று காலத்தில் இருப்பதை மறந்து அஜாக்கிரதையாக யாரும் இருக்க கூடாது என மருத்துவக் குழு எச்சரிக்கிறது.
மேலும், மருத்துவக் குழு குறிப்பிடும் Long Covid நோய் பரவல் பற்றி தனியார் செய்தி நிறுவனத்துடனான கலந்துரையாடலில் மும்பையின் மசினா மருத்துவமனையின் மார்பு மற்றும் நுரையீரல் நிபுணர் டாக்டர் சங்கேத் ஜெயின் கூறியதாவது,
கொரோனா தொற்று பரவல் காலத்தில் நாம் சந்தித்த சிரமங்கள் அறிந்ததே, ஆனாலும், நாம் இன்றைக்கு இரண்டு தடுப்பூசிக்ளைப் போட்டுக் கொண்டு எந்த விதமான அச்சமும் இல்லாமல் சுற்றுகிறோம். ஆனால், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களிடையே இன்றைக்கு பரவும் Long Covid குறித்தும் நாம் எச்சரிக்கையக இருக்க வேண்டும். இந்த Long Covid நோயானது இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டவர்களிடையே இருந்து தடுப்புசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மிகச் சுலபமாக பரவி விடுகிறது. மேலும், இந்த Long Covid ஒரு மாதத்திற்கு மேலாகவும் நீடிக்கிறது. இதற்கான அறிகுறிகள், லேசான காய்ச்சல், உடல் சோர்வு, கடுமையான வரட்டு இருமல், மூச்சுத் திணறல், படபடப்பு, செரிமாணக் கோளாறு, தலைவலி மற்றும் மூக்கு ஒழுகுதல் போன்றவை அறிகுறிகளாக இருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா வைரஸ் தடுப்பூசி இறப்பு அபாயத்தை 34 சதவீதமும், Long Covidஆல் பாதிக்கப்பட்டவர்களிடையே இறப்பு ஆபத்தை 15 சதவீதமும் குறைத்துள்ளது என்பதையும் ஆய்வு வெளிப்படுத்துகிறது. தடுப்பூசிகள் நுரையீரல் மற்றும் இரத்தம் உறைதல் போன்ற Long Covid நோயால் பாதிக்கப்பட்டவர்களில் தடுப்பூசி போடப்பட்ட மக்களிடையேயும் போடாத மக்களிடையேயும் , இந்த கோளாறுகள் முறையே 49 சதவீதம் மற்றும் 56 சதவீதம் குறைந்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்