கரூர் மாவட்டத்தில் புதிதாக 13 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 22,496 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 29. இதேபோல் கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் எண்ணிக்கை 21,918 ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 350 பேர். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 228 ஆகும் .
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து மூன்று நாட்களாக கரூர் மாவட்டத்தில் தடுப்பூசிகள் போடப்பட வில்லை. தொடர்ந்து மூன்று நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக ஊசி போடாத நிலையில் நாளை தடுப்பூசி போடப்படும் என்ற ஆவலுடன் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதைப்போல் கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் 20 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் குழந்தை தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் தொற்று பாதித்தவர்கள் 20 க்கு மிகாமல் உள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் தொற்று பதித்தவர்களின் இன்றைய நிலவரம் :-
அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 நபர்கள் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் 46,587 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 79 . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 45,354 ஆகும்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் யாரும் இல்லை. அதேபோல் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 473 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 796 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.
அதன்படி மாவட்ட மக்கள் தொடர்ந்து தமிழக அரசின் விதிமுறைகளை கடைபிடித்தால் தற்போது வரை உள்ள மூன்றாம் அலையில் இருந்து பாதுகாக்கலாம்.