கரூரில் இன்று புதிதாக  18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. அதேபோல் தொற்று சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 23 நபர்கள். சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கையில் இன்று எவருமில்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 252-ஆக உள்ளது. தற்போது நாம் கடந்த 24 மணிநேர நிலவரப்படி கரூர் மாவட்டத்தில் நிலவரத்தை கண்டுள்ளோம்.




கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை முடித்து பின்னர் வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கையை மற்றும் சிகிச்சை பலனின்றி இறந்தவர் எண்ணிக்கைகளை தற்போது காணலாம் : -  கரூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை 22,465 ஆகும், கொரோனா தொற்று சிகிச்சையில் பூரண குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 21,863 ஆகும், தொற்று சிகிச்சை பலனின்றி இதுவரை கரூர் மாவட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையில் 350-ஆக உள்ளது. கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்து நாட்களாக தொற்று பாதித்தவர்கள் 20 நபர்களுக்கு மேல் மிகாமல் உள்ளது.




அதேபோல் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் மூலம் நடைபெறும் தடுப்பூசிகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து இதுவரை மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வ தகவலை அறிவிக்காத நிலையில் நாளை தடுப்பூசி கரூர் மாவட்ட மக்களுக்கு உண்டா? இல்லையா? என்ற சந்தேகங்கள் இருந்த வண்ணம் உள்ளன.




அதேபோல் மாவட்ட சுகாதாரத் துறையின் சார்பாக நாள்தோறும் 10-க்கு மேற்பட்ட பஞ்சாயத்துக்களில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர். கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை இணைந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த நிலையில் தற்போது தொற்று பாதிப்பு மிகக்குறைந்த அளவில் நாள்தோறும் பதிவாகி வருகிறது.




எனினும் ,கரூர் மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆன்மீக தலங்கள் திறந்து உள்ளதால் மேலும் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக மாவட்ட மக்கள் அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி, கிருமிநாசினி உள்ளிட்ட தமிழக அரசின் விதிமுறைகளை பயன்படுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.