மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும் 291நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89799 -ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 577  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 84801-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1215 இருக்கிறது. இந்நிலையில் 3783 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், திண்டுக்கல் ,  சிவகங்கை , நெல்லை ,தேனி , தூத்துக்குடி , ஆகிய இடங்களில் விசாரித்தோம்.




சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 83 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23110-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 93 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 21994-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 215-ஆக  இருக்கிறது. இந்நிலையில் 901  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று மட்டும் 155 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36816-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 147 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 34537-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 657 இருக்கிறது. இந்நிலையில் 1622 கொரோனா பாதிப்பால் திண்டுக்கல் மாவட்டத்தில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 



தேனி மாவட்டத்தில் இன்று 149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50040ஆக உயர்ந்துள்ளது. அதே போல்  335 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.  இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 46945ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் தேனி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 529 இருக்கிறது. இந்நிலையில் 2566 கொரோனா பாதிப்பால் தேனியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



 

நெல்லை மாவட்டத்தில் இன்று மட்டும் 336 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 61459ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 527 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 57309-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்பது ஆறுதல். இதனால் நெல்லை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 443 இருக்கிறது. இந்நிலையில் 3707 கொரோனா பாதிப்பால் நெல்லை சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.





தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மட்டும் 156 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64250-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 315 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 61557-ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனா தொற்றுக்கு ஒருவர் உயிரிழந்துள்ளார் . இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 437 இருக்கிறது. இந்நிலையில் 2256 கொரோனா பாதிப்பால் தூத்துக்குடி சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூப்பில் வீடியோக்களை காண