ஹரியானாவில் முதல்முறையாக கெனைன் வகை கொரோனா வைரஸால் 15 நாய்கள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொரோனா


2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவெடுத்த கொரோனா பெருந்தொற்று 2020 மற்றும் 2021ம் ஆண்டினை, முதல் அலை இரண்டாவது அலை என முழுமையாக விழுங்கிவிட்டது. உலகம் முழுவதையும் தன் கட்டுக்குள் வைத்திருந்த சிறிய வைரஸ், பணக்காரன், ஏழை, அதிகாரத்தின் உச்சானிக் கொம்பில் இருப்பவர்கள், அதிகாரமற்ற எளிய மக்கள் என அனைவருக்கும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது. இரண்டு அடுக்கு மற்றும் மூன்றடுக்கு பாதுகாப்பில் இருந்த அனைவரையும் இந்த வைரஸ் விட்டு வைக்கவில்லை. உலகையே கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்தம்பிக்க வைத்த கொரோனா பெருந்தொற்று இந்த ஆண்டில் தான் ஓரளவு கட்டுக்குள் வந்தது. ஆனாலும் முழுவதுமாக கட்டுக்குள் வந்துவிடவில்லை. பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என முன்களப் பணியாளர்கள் உட்பட பலரும் உயிரிழந்தனர்.  ஊரடங்கு, தடுப்பூசி என ஓரளவு கட்டுக்குள் வந்திருந்தாலும்,  இன்றைக்கும் அதன் பரவலும் அதனால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையையும் பார்க்க முடிகிறது.


 மும்பை மற்றும் டெல்லி போன்ற பெரு நகரங்களில் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. இப்படியான பெருந்தொற்று பரவல் சூழலில் அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தொடங்கி சாதாரண மக்கள் வரை பெரும்பாலும் யாரும் முக கவசம் அணிவதில்லை, சமூக இடைவெளியை பின்பற்றுவதில்லை என்பதை நாம் கண்கூடப் பார்க்க முடிகிறது.


கொரோனாவால் நாய்கள் உயிரிழப்பு


இந்த நிலையில், ஹரியானாவில் முதல்முறையாக கெனைன் வகை கொரோனா வைரஸால் 15 நாய்கள் உயிரிழந்துள்ளது. ஹரியானாவின் கிஸாசர்சா, அரோதக், பதோபாபத் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50 நாய்கள் வாந்தி, ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருந்தது. நாய்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் 15 நாய்களுக்கு  கெனைன் வகை கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொற்றால் பாதிக்கப்பட்ட நாய்கள் மேலும் பலவீனம் அடைந்ததால் உயிரிழந்தது.






பயப்பட வேண்டாம்


இதனைத்தொடர்ந்து, கால்நடைத்துறை மருத்துவர்கள் அறிவுரை ஒன்றை வழங்கியுள்ளனர். வயிற்றுப்போக்கால் பாதிக்கப்படும் நாய்களை  அலடசியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றனர். மேலும், செல்லப்பிராணிகளை வளர்ப்பவர்கள் கொரோனாவல் பயப்பட வேண்டும் என்றும் கூறினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண