மதுரை மாவட்டத்தில், இன்று மட்டும்  592 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 87118-ஆக உயர்ந்துள்ளது. அதே போல் 81011  நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 80333-ஆக அதிகரித்துள்ளது. இன்று 1 நபர் உயிரிழந்துள்ளார். இதனால் மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1206 இருக்கிறது. இந்நிலையில் 4901 நபர்கள் கொரோனா பாதிப்பால் மதுரையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் மதுரையை சுற்றியுள்ள விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய இடங்களில் விசாரித்தோம்.




விருதுநகர் மாவட்டத்தில் இன்று மட்டும் 499 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 53991 -ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 421 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 49835-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை என்பது ஆறுதல். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 554 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 3604  நபர்கள் கொரோனா பாதிப்பால் விருதுநகரில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.














சிவகங்கை மாவட்டத்தில் இன்று மட்டும் 137 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22323-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 104 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 21239-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழப்பு இல்லை ஆறுதல் . இதனால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 214 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 870  நபர்கள் கொரோனா பாதிப்பால் சிவகங்கையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று மட்டும் 170 நபர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23235-ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் 136 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 21572 அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 365 -ஆக  இருக்கிறது. இந்நிலையில் 1298 நபர்கள் கொரோனா பாதிப்பால் ராமநாதபுரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.