இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப் பிரதேசத்தில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸினால் இதுவரை 40 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  


 இந்தியாவில் டெல்டா ப்ளஸ் எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா, மத்தியப்பிரதேசம் மற்றும் தற்பொழுது தமிழகத்திலும் இந்த உருமாறிய கொரோனா வைரஸின் தாக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த ஜூன் 18 ன் நிலவரப்படி உலகெங்கிலும் இதுவரை 205 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா டெல்டா ப்ளஸ் வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் பாதிக்கும் மேல் இந்த வைரஸின் பாதிப்புக்குள்ளாகி இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றனர். இச்சூழலில்  தற்பொழுது இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்பட்டுவிட்டதாக 28 ஆய்வகங்களைக்கொண்ட கொரோனா மரபியல் குறித்து ஆராயும் இந்திய கோவிட் கூட்டமைப்பு ( INSACOG) கண்டறிந்துள்ளது.  இது டெல்டா பி.1.617.2.1 வைரஸ்  என்ற மாறுபட்டினைக் கொண்டுள்ளது.





கடந்த 2020 ஆம் ஆண்டு ஆரம்பித்த கொரோனா தாக்கம் இன்னும் பல்வேறு மாறுபடுகளுடன் மக்களை பாதிப்புக்குள்ளாக்கி வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் 2 வது அலையின் பாதிப்பு சற்று தணிந்திருக்கும் போது மக்கள் உருமாறிய கொரோனா வைரஸினால் பாதிக்குள்ளாகுவதாக இங்கிலாந்தின் பொது சுகாதார அமைப்பு தெரிவித்தது. அது டெல்டா ப்ளஸ் வைரசாக இருக்ககூடும் எனவும் மக்களை அதிகளவில் பாதிப்புக்குள்ளாக்கும் என தெரிவித்திருந்தது. ஆனால் இதற்கு முன்னதாக மகாராஷ்டிராவின் நோயினால் பாதிகப்பட்ட சிலரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில் அது ஆய்வுக்கு உட்படுத்தும் போது ஏதோ உருமாறிய வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து தான் ஆய்வுகளை முறையாக மேற்கொள்ளப்பட்டு தற்போது வரை 40 டெல்டா ப்ளஸ் வழக்குகள் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


டெல்டா ப்ளஸ் கொரோனா வைரஸ் என்றால் என்ன? எப்படி பாதிப்பினை ஏற்படுத்துகிறது?


 கொரோனா தொற்றின் 2 வது அலை கட்டுக்குள் வந்துள்ள நிலையில் தான், இந்தியாவில் இன்னும் பல மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனா டெல்டா ப்ளஸ் தெரியாமலேயே பரவி இருக்கலாம் என கூறப்படுகிறது.  குறிப்பாக டெல்டா வகை கொரோவான B.1.617.2 உருமாற்றம் அடைந்து B.1.617.2.1 என்ற டெல்டா ப்ளஸ் கொரோனாவாக உள்ளது. மேலும் உலக சுகாதார நிறுவத்தின் தகவலின் படி, தற்பொழுது உலகெங்கிலும் மாறுபட்ட பரிமாண வளர்ச்சியுடன் டெல்டா வைரஸ் உருமாறியுள்ளது. இந்த  உருமாறிய டெல்டா வைரஸ், டெல்டா பிளஸ் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த புதிய உருமாறிய வைரஸ், கொரோனா வைரசின் ஸ்பைக் புரதத்தில் கே 417என் பிறழ்வாழ் வகைப்படுத்தப்படுகிறது.


புதிய உருமாறிய டெல்டா ப்ளஸ் K417N ஸ்பைக் புரதத்தின் லைசின் மற்றும் அஸ்பாரகின் ஆக மாற்றப்படுவதை ஒத்துள்ளது. இதில் AY.1 மிகவும் பிரபலமானது, ஆனால் இவை ஒரே மாதிரியானவை அல்ல. குறிப்பாக அமெரிக்காவிலிருந்து பாதிப்பினை ஏற்படுத்தும் புதிய வகையான கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் இந்தியாவில் கண்டறியப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  •  


 இந்த வைரஸ்கள் மக்களின் நோய் எதிர்ப்புச்சக்தியினை தகர்த்திக்கொண்டு உள்ளே நுழைந்து பாதிப்பினை ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இதன் பாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் எதுவும் இல்லை என கூறப்படும் நிலையில்,  மாநிலங்களின் கண்காணிப்பை வலுப்படுத்துவதோடு, பொது சுகாதார மேம்பாட்டினை மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.