கொரோனா தொற்று பெரியவர்களிடையே ஏற்படுத்தும் பாதிப்பை விட குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே குறைவான பாதிப்பை ஏற்படுத்துவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


மக்களவையில் பதில்


மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப்பூர்வமாக இன்று (ஜூலை.29) அளித்த- பதிலில், ஜனவரி 1, 2022 முதல் ஜூலை 25 வரை 18 வயதுக்கு உள்பட்டோரிடம் ஆய்வு செய்யப்பட்டதில் டெல்டா மற்றும் அதன் உட்பிரிவுகள் 118 மாதிரிகளிலும், ஒமைக்ரான் மற்றும் அதன் உட்பிரிவுகள் 7,362 மாதிரிகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, நாட்டில் கொரோனா தொற்றால் குழந்தைகள் பாதிக்கப்படுவது, 12-18 வயது மற்றும் 5-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் தற்போதைய நிலை குறித்த கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பாரதி பிரவின் பவார் பதிலளித்தார். 


 






"உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, வயது வந்தோருடன் ஒப்பிடும்போது, குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே SARS-CoV-2 நோய்த்தொற்று பொதுவாக குறைவான பாதிப்பையும் தாக்கத்தையுமே ஏற்படுத்துகின்றன" எனத் தெரிவித்தார்.


குழந்தைகளுக்கான தடுப்பூசி


ஜூலை 26ஆம் தேதி வரை 9.96 கோடி முதல் டோஸ்கள் (82.2% கவரேஜ்) மற்றும் 7.79 கோடி இரண்டாவது டோஸ்கள் (64.3% கவரேஜ்) 12-18 வயதுக்குட்பட்டோருக்கு செலுத்தப்பட்டுள்ளன.


நாட்டில் தேசிய கொரோனா தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


எனினும், தகுதியான அனைத்து குழந்தைகளுக்கும் தடுப்பூசி செலுத்த அனைத்து மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் போதுமான தடுப்பூசி அளவுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.


தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டம்


முன்னதாக நேற்று முன் தினம் (ஜூலை. 27) பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், குடும்பக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தை இந்தியா முன்கூட்டியே புரிந்துகொண்டதாகவும், 1952 ஆம் ஆண்டில் தேசிய குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடு இந்தியா தான் என்றும் தெரிவித்திருந்தார். 


இந்தியா குடும்பக் கட்டுப்பாட்டு கூட்டமைப்பான FP2020இன் முக்கிய உறுப்பினராக உள்ளது, அது இப்போது FP2030க்கு மாறியுள்ளது,


இதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் குடும்பக் கட்டுப்பாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண