Coronavirus LIVE Updates: கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
கேரளாவில் இன்று தமிழகம் வந்த ஒருவருக்கு கோவிட்-19 தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் கேரள மாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் RT-PCR பரிசோதனை செய்து நெகட்டிவ் என சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1929 (நேற்று- 1,956) பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,77,237 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 235 பேரும், சென்னையில் 182 பேரும்,ஈரோடில் 178 பேரும், செங்கல்பட்டில் 107 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்திய அரசு இதுவரை, 52.40 கோடிக்கும் அதிகமான (52,40,60,890) கொவிட் தடுப்பூசி டோஸ்களை, மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும், இலவசமாக வழங்கியுள்ளது. மேலும் கூடுதலாக 8,39,780 தடுப்பூசிகள் வழங்கப்படவிருக்கின்றன.
இவற்றில், இன்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 50,51,29,252 டோஸ் தடுப்பூசி (வீணானவை உட்பட) பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 2.33 கோடி (2,33,55,890) கொவிட் தடுப்பூசி டோஸ்கள், மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கையிருப்பில் உள்ளன.
புதுச்சேரியில் மேலும் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை கூறியுள்ளது. மொத்த பாதிப்பு 1,21,665 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,19,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் ஒரேநாளில் 35,499 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 447 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 39,686 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
சென்னையில் ரங்கநாதன் தெரு, கொத்தவால் சாவடி உள்ளிட்ட 9 இடங்களில் இன்று முதல் கடைகள் திறக்கப்பட்டன. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 20.34 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 43.06 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், 18.27 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 24,390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 129 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1956 ( நேற்று முன்தினம்- 1,985) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,73,308 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 241 பேரும், சென்னையில் 187 பேரும்,ஈரோடில் 185 பேரும்,, செங்கல்பட்டில் 105 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
குணமடைவோர் எண்ணிக்கை: நேற்று 1807 (நேற்று முன்தினம்- 1,839) பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,20,584 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,317 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8338 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -