Coronavirus LIVE Updates: சென்னையில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாத 710 பேர் மீது வழக்குப் பதிவு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நேற்று மட்டும் முகக்கவசம் அணியாதது தொடர்பாக 710 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள ரங்கநாதன் தெரு சந்திப்பில் வடக்கு உஸ்மான் சாலை முதல் மாம்பலம் இரயில் நிலையம் வரை,
புரசைவாக்கம் டவுட்டன் சந்திப்பு முதல் புருக்லின் சாலை வரை,
ஜாம் பசார் பாரதி சாலை ரத்னா கஃபே சந்திப்பு முதல் பெல்ஸ் சாலை சந்திப்பு வரை,
ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜார், என்.எஸ்.சி போஸ் சாலை குறளகம் முதல் தங்கசாலை சந்திப்பு வரை,
இராயபுரம் மார்கெட் பகுதியில் கல்மண்டபம் சாலை, வாட்டர் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோவில் வரை,
அமைந்தகரை மார்கெட் பகுதியில் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரை காவல் உதவி மையம் முதல் புல்லா அவென்யூ திருவிக.நகர் பூங்கா சந்திப்பு வரை மற்றும் ரெட்ஹில்ஸ் மார்கெட் பகுதியில் ஆஞ்சநேயர் சிலை முதல் அம்பேத்கர் சிலை வரை
கொத்தவால் சாவடி மார்கெட்
ஆகிய பகுதிகளில் உள்ள வணிகவளாகங்கள் மற்றும் அங்காடிகள் நாளை முதல் (09.08.2021) அடுத்த இரண்டு வாரங்களுக்கு செயல்பட அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
வாட்ஸ் ஆப் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழ் பெற "Covid Certificate" என டைப் செய்து +91 9013151515 என்ற எண்ணுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்ப வேண்டும்; அதன் பிறகு நமக்கு வரும் OTP எண் மூலம் கொரோனா தடுப்பூசி சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 131,628 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இது, கடந்த ஜனவரி மாதத்த்துக்குப் பிறகு அதிகபட்ச தினசரி பாதிப்பாகும்.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.38%ஆக உள்ளது. தினசரி தொற்று உறுதி வீதம் 13 நாட்களாக 3%க்கும் கீழ், 2.27%ஆக பதிவாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 48.00 கோடியாக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 43,910 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 39,070 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,06,822 ஆக உள்ளது.
இந்தியாவின் கோவிட்19 தடுப்பூசி இயக்கம் 50 கோடிக்கு மேல் தடுப்பூசி தவணைகள் செலுத்தி சாதனையை எட்டியுள்ளது.
மாநிலங்களுக்கு 8 லட்சத்து 99ஆயிரத்துக்கும் கூடுதலான கோவிட்19 க்கான தடுப்பு மருந்து வினியோகம் செய்யப்பட உள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முதல் டோஸ் கோவிஷீல்ட் மற்றும் இரண்டாவது டோஸ் கோவாக்சின் என கலப்பு தடுப்பூசி செலுத்துவது கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகியுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
திருப்பூரைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சேலம் மாவட்டத்தில் பல்வேறு கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, சேலம் மாநகரில் அனைத்து ஜவுளிக் கடைகள், நகைக்கடைகள், வணிக வளாகங்கள் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மால்கள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் ஞாயிறன்று செயல்பட அனுமதியில்லை.
புதுச்சேரியில் மேலும் 79 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 1,21,602 ஆக அதிகரித்துள்ளது. 849 பேர் சிகிச்சையில் உள்ள நிலையில் 1,18,953 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் மேலும் 39,070 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,19,34,455 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 43,910 பேர் குணமடைந்த நிலையில், தொற்றுக்கு மேலும் 491 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று முதல் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 60 வயது மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இரண்டாம் தவணை செலுத்திக் கொள்வதற்காக சிறப்பு முகாம் நடைபெறும் - சுகாதாரத் துறை அறிவிப்பு
உலகம் முழுவதும் 20.29 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 42.98 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், 18.22 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 68,950 பேருக்கு கொரோனா. ஒரேநாளில் 320 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 223 பேரும், ஈரோடில் 198 பேரும், சென்னையில் 194 பேரும், செங்கல்பட்டில் 115 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில்1,839 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,18,777 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,286 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1316 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3435 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -