Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் புதிதாக 1,969 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADULast Updated: 07 Aug 2021 07:32 PM

Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை...More
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1,985 (நேற்று 1,997) பேர் பாதிக்கப்பட்டனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,71,383 ஆக அதிகரித்துள்ளது. குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,908 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,16,938 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கொரோனா தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர். இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,185 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1335 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3369 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன
மத்திய அரசு தொகுப்பிலிருந்து தமிழ்நாட்டிற்கு 3.24 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.