Coronavirus LIVE Updates: மாநிலம் முழுவதும் 20,185 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், மாநிலத்தின் மொத்த தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.3 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 1,60,501 (நேற்று,1,58,797) கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 (3,83,71,633) கோடியாக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி விகிதம் 5%க்கும் அதிகமாக இருந்தால், கொரோனா ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறித்தியுள்ளது
இறப்பு எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,260 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,185 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1335 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3369 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்க கூடாது. கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேல் வாடிக்கையாளர்களை அனுமதித்து செயல்படும் வணிக/ இதர நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லூரிகள், ஆகஸ்ட் 16 ஆம் தேதியிலிருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும். இம்மருத்துவ கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மருத்துவப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இன்று காலை மருத்துவ நிபுணர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தாக பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்கள். பள்ளிகள் செல்லாமல் பல மாதங்களாக தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது குழந்தைகளிடையே பெரும் மன அழுத்தத்தையும் சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியையும் ஏற்படுத்தி வருவதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். மேலும், இணையம் மூலமாக நடத்தப்படும் ஆன்லைன் வகுப்புகள் பெரும்பாலான பிள்ளைகளுக்குக் கிடைக்காத சூழ்நிலை உள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அனைத்து தரப்பு கருத்துகளையும் ஆய்ந்து அதன் அடிப்படையில் வரும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரு நேரத்தில் 50 விழுக்காடு மாணவர்களுடன் கொரோனா தொற்று குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (Standard Operating Procedure) பின்பற்றி பள்ளிகள் துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிக்கல்வித் துறை அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 9,10,11 மற்றும் 12-ம் வகுப்புகளை 50% மாணவர்கள் உடன் திறக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளது
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு வரும் 9ம்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். தற்போது, கொரோனா தொற்று அதிகரிப்பதால், கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசிக்க வாய்ப்பு என தகவல்.
தமிழகத்திற்கு இன்று 3.31 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகள் வரவுள்ளன.
ஆந்திர பிரதேசத்தில் 2,209 பேருக்கு உறுதியானது கொரோனா தொற்று : 22 பேர் உயிரிழப்பு..
புதிய உருமாறிய டெல்டா வகை கொரோன தொற்று பாதிப்பு 139 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஆல்ஃபா வகை கோவிட் பாதிப்பு 182 நாடுகளிலும், பீட்டா வகை கோவிட் பாதிப்பு 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"கால நிலை மாற்றம் மற்றும் கொரோனா தொற்று நோயின் பின்னணியில் உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்தல்" குறித்த பன்னாட்டு மாநாட்டை சென்னை தரமணி, எம் எஸ் ஸ்வாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் துவக்கி வைத்து உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவதா அல்லது கட்டுப்பாடுகளை அதிகரிப்பதா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். கொரோனா அதிகரிக்கும் சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
புதுச்சேரியில் ஒரே நாளில் 88 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பாதிப்பு 1,21,421 ஆக அதிகரித்துள்ளது. 103 பேர் குணமடைந்த நிலையில் 872 பேர் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 44,643 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 41,096 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 464 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டிற்காக புனேவில் இருந்து 33,143 கோவிஷீல்டு தடுப்பூசி இன்று மதியம் 12 மணிக்கு சென்னை வருகிறது.
உலகம் முழுவதும் 20.16 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42.79 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.14 கோடி பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,17,209 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரே நாளில் 557 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
Background
தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 1,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: நேற்று 1,943 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,15,030 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.
இறப்பு எண்ணிக்கை: கொரோனா தொற்று காரணமாக நேற்று 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்துள்ளது.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,138 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 1299 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3400 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -