Coronavirus LIVE Updates: சென்னையில் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் சோதனை தொடக்கம்

Covid 19 LIVE Update India: உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று மேலாண்மை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 31 Aug 2021 02:05 PM
சென்னையில் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் சோதனை தொடக்கம்

சென்னையில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் 3ஆவது டோஸ் பரிசோதனை தொடங்கி நடைபெற்று வருகிறது. தன்னார்வலர்களுக்கு பூஸ்டர் டோஸ் வழங்கப்படுகிறது.

Pucucherry Covid Update: புதுச்சேரியில் மேலும் 115 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 1,23,572 ஆக அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு 100ஐ தாண்டியுள்ளது. இதுவரை 1,21,045 பேர் குணமடைந்த நிலையில், 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covid 19 Cases in India: நேற்றைவிட கொரோனா பாதிப்பு இன்று குறைந்தது

இந்தியாவில் ஒரேநாளில் 30,941 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று 42,909 என பதிவான நிலையில், இன்று பாதிப்பு குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 350 பேர் உயிரிழந்த நிலையில், 36,275 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Covid 19 Cases Worldwide: உலகளவில் 21.78 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 21.78 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45.22 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் 19.47 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1.02 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேநாளில் 525 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

Background

Covid 19 LIVE Updates India:


தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1523 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,13,360 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 188 பேரும், சென்னையில் 183 பேரும், ஈரோட்டில் 129 பேரும்,  தஞ்சாவூரில் 107 பேரும்,  செங்கல்பட்டில் 92 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


நாடு முழுவதும், 42,909 பேர் புதிதாகத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 64 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.


குணமடைவோர் எண்ணிக்கை: 1,739 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,61,376 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம்,  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 34,763 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,19,23,405 ஆக உயர்ந்துள்ளது. நம்நாட்டில் குணமடைந்தவர்களின் விழுக்காடு, 97.51 சதவீதமாக உள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.