Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,949 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டிற்கு இந்த மாதத்தில் 29 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதாக மத்திய அரசு கூறியுள்ளதாகவும், கொரோனா தடுப்பு விதிகள் பின்பற்றப்படுகிறதா என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாகவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் 15 நாட்களுக்கு பிறகு ஒருநாள் கொரோனா பாதிப்பு 100 ஐ தாண்டியுள்ளது. அங்கு ஒரே நாளில் 120 பேருக்கு தொற்று உறுதியானதால் பாதிப்பு 1,21,252 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 1,789 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 42,625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 36,668 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். ஒரேநாளில் 562 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நீண்ட நாட்களாக கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் உள்ள எந்த மையங்களிலும் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படாது என கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் 20.02 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 42.58 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.04 கோடி பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,02,983 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரே நாளில் 506 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.
Background
தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 908 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாட்களாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் 2வது நாளாக பாதிப்பு குறைந்துள்ளது. 1,45,585 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 1,908 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 65 ஆயிரத்து 452 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 727 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 203 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 189 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 203 ஆக உள்ளது.
கோவை 208, ஈரோடு 181, தஞ்சை 118, சேலம் 75, செங்கல்பட்டு 122, கடலூர் 79, திருச்சி 68, திருவள்ளூர் 84, நாமக்கல் 49, காஞ்சிபுரம் 44 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
கொரோனாவால் மேலும் 29 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34,159 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 23 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 6 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 7 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 3 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8322 பேர் உயிரிழந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -