Coronavirus LIVE Updates: ஒரேநாளில் 42,909 பேருக்கு கொரோனா; 380 பேர் உயிரிழப்பு

Covid 19 LIVE Update India: உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று மேலாண்மை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 30 Aug 2021 10:02 AM
ஒரேநாளில் 42,909 பேருக்கு கொரோனா; 380 உயிரிழப்பு

இந்தியாவில் ஒரேநாளில் 42,909 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 380 பேர் உயிரிழந்த நிலையில், 34,763 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


 





உலகளவில் 21.71 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 21.71 கோடி பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 45.14 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் 19.40 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 36,578 பேருக்கு கொரோனா உறுதியானது. ஒரேநாளில் 284 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

Background

தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 1,538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சென்னையில் ஒரேநாளில் 189 பேருக்கு தொற்று உறுதியானது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 22 பேர் உயிரிழந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு பின் கேரளாவில் கொரோனா பாதிப்பு 30,000க்கும் கீழ் குறைந்துள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.