Coronavirus LIVE Updates: கொரோனா - விமான சேவைக்கு தடை நீட்டிப்பு 

Covid 19 LIVE Update India: உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா தொற்று மேலாண்மை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 29 Aug 2021 12:52 PM
கொரோனா - விமான சேவைக்கு தடை நீட்டிப்பு 

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விமான சேவைக்கான தடை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மேலும் 96 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 1,23,394 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,20,890 பேர் குணமடைந்த நிலையில், தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழந்தனர்.

Covid 19 India Cases: இந்தியாவில் 45,083 பேருக்குக் கொரோனா, 460 பேர் உயிரிழந்தனர்

கடந்த 24 மணிநேரத்தில் 45,083 கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. 460 பேர் மரணமடைந்துள்ளனர்.இதையடுத்து நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,694,188 என உயர்ந்துள்ளது.

Covid 19 LIVE Update: குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,768 பேர் குணமடைந்துள்ளனர்

குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1,768 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,57,884 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். அதே சமயம்,  நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 31,374 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 3,18,52,802 பேர் குணமடைந்துள்ளனர் 


 

Coimbatore Covid Cases: அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 230 பேருக்கு கொரோனா தொற்று

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி, புதிதாக 1551 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை
26,10,299 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 230 பேரும், சென்னையில் 182 பேரும், ஈரோட்டில் 115 பேரும், செங்கல்பட்டில் 122 பேரும், தஞ்சாவூரில் 77 பேரும், நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.


நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 3,59,775 ஆக உள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.06% ஆகும்.  

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. 



 



 


 

Puducherry Covid Cases: புதுச்சேரியில் மேலும் 67 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 1,23, 298 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,20,790 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 698 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Covid 19 LIVE Update India: இந்தியாவில்  ஒரே நாளில் 46,759 பேருக்கு கொரோனா 

இந்தியாவில் ஒரேநாளில் 46,759 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,26,49,947ஆக உயர்ந்தது. ஒரேநாளில் 509 பேர் பலியானதால் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,37,370ஆக உயர்ந்தது.

ஒரு கோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி என்கிற இலக்கைக் கடந்தது இந்தியா

இந்தியாவில் இதுவரை ஒருகோடி பேருக்குக் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதை ஒரு இயக்கமாக நடத்திச் செல்பவர்களுக்கும் தனது வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார்.  

கேரளா கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு!

கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 30000 புதிய கொரோனா வைரஸ் பரவல் பதிவாகியுள்ளது.அதிகபட்ச கொரோனா பாதிப்புகளைப் பதிவு செய்யும் ஒரே மாநிலம் தற்போது கேரளாதான் என மத்திய அரசும் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் மேலும் 73 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மொத்த பாதிப்பு 1,23, 151 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,20,575 பேர் குணமடைந்த நிலையில், தற்போது 767 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா

இந்தியாவில் ஒரேநாளில் 46,164 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  கேரளாவில் ஒரேநாளில் 30 ஆயிரத்துக்கு மேல் கொரோனா உறுதியானதால் ஒருநாள் பாதிப்பு அதிகரித்துள்ளது.


 

சென்னையில் இன்று 400 முகாம்களில் தடுப்பூசி

சென்னையில் இன்று 400 சிறப்பு முகாம்கள் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. மாநகராட்சி சார்பில் வார்டுக்கு 2 தடுப்பூசி முகாம்கள் என 400 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னை மாநகராட்சி பகுதிகளில் தடுப்பூசி  செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உலகளவில் 21.46 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 21.46 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 44.75 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில் 19.20 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,69,789 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. ஒரேநாளில் 1,275 பேர் தொற்றால் உயிரிழந்தனர்.

Background

Covid 19 LIVE Update India: 


தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் நேற்று ஆயிரத்து 573 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1,572, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,573 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 05 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 065 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 170  நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 170 ஆக உயர்ந்துள்ளது. கோவை 181, ஈரோடு 130, தஞ்சை 84, செங்கல்பட்டு 90, சேலம் 73, கடலூர் 54, திருப்பூர் 72, திருச்சி 45, திருவள்ளூர் 71, நாமக்கல் 52, வேலூர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.