Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 25 Aug 2021 08:01 PM

Background

தமிழகத்தில் நேற்று 1630 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 931 ஆகும். பெண்கள் 699 நபர்கள் ஆவர். இதனால், மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 855 ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தின் தலைநகரான...More

தமிழ்நாட்டில் இன்று 1,573 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்தது. ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.  தமிழ்நாட்டில் இன்று ஆயிரத்து 573 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 1,572, வெளிமாநிலத்தில் இருந்து வந்த ஒருவர் என மொத்தம் 1,573 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 லட்சத்து 05 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 43 ஆயிரத்து 065 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 170  நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 165 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதிப்பு 170 ஆக உயர்ந்துள்ளது. கோவை 181, ஈரோடு 130, தஞ்சை 84, செங்கல்பட்டு 90, சேலம் 73, கடலூர் 54, திருப்பூர் 72, திருச்சி 45, திருவள்ளூர் 71, நாமக்கல் 52, வேலூர் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.