Coronavirus LIVE Updates: இந்தியாவில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADULast Updated: 20 Aug 2021 09:23 AM

Background

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1797 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,94,233ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 210 பேரும், சென்னையில் 198 பேரும், ஈரோட்டில் 156 பேரும், சேலத்தில் 103...More

இந்தியாவில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36571 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து கொரோனா சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 363605 என உயர்ந்துள்ளது. கடந்த 150 நாட்களில் பதிவாகியுள்ள குறைவான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 97.54 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.