Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
ABP NADULast Updated: 17 Aug 2021 06:40 PM

Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 151 பேரும், சேலத்தில் 123...More
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1851 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,90,632ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக கோயம்பத்தூரில் 217 பேரும், சென்னையில் 205 பேரும், ஈரோட்டில் 151 பேரும், சேலத்தில் 123 பேரும், செங்கல்பட்டில் 112 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். 1,911 குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,35,715 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 98% என்றளவில் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று காரணமாக 28 பேர் உயிரிழந்துள்ளனர். மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,547 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 8363 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுநாள் வரையில், மிகக் குறைந்த இறப்பு எண்ணிக்கையை அரியலூர் மாவட்டம் பதிவு செய்துள்ளது. கடந்த 10 நாட்களாக, மாநிலத்தின் சாராசரி இறப்பு எண்ணிக்கை 30 ஆக உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1804 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது