Coronavirus LIVE Updates: எதிர்காலத்தில் குழந்தைகளை மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கலாம் - ஆய்வு
உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
எதிர்காலத்தில் குழந்தைகளை மட்டுமே கொரோனா தொற்று பாதிக்கலாம் - ஆய்வு
இந்தியாவில் ஒரேநாளில் 40,120 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரேநாளில் 42,295 பேர் குணமடைந்துள்ள நிலையில், 585 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் 20.61 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 43.46 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 18.50 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,18,589 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஒரேநாளில் 662 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
Background
தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1964 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 243 பேரும், கோயம்பத்தூரில் 229 பேரும்,,ஈரோடில் 164 பேரும், செங்கல்பட்டில் 140 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக குறைந்து வந்த மாநிலத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாட்களுக்குப் பிறகு, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: 1917 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,26,317 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.87% குணமடைந்துள்ளனர்.
சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை: மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,382 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.3 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது.
கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தின் தொற்று உறுதி விகிதம் 2.3 ஆக அதிகரித்துள்ளது. 0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம் , தற்போது 0.8 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்க கூடிய வகையில் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -