Coronavirus LIVE Updates: தமிழ்நாட்டில் புதியதாக 1942 பேருக்கு கொரோனா

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

ABP NADU Last Updated: 12 Aug 2021 07:51 PM
தமிழ்நாட்டில் புதியதாக 1942 பேருக்கு கொரோனா

தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 1,942 பேருக்கு கொரோனா பாதிப்பு புதியதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா வைரஸ் காரணமாக 33 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்த 1892 பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன

தமிழகத்தில் கடந்த ஜூலை 23ஆம் தேதி நிலவரப்படி 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் முழுமையாக அகற்றம். தமிழ்நாட்டில் 471 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன, சென்னையில் 85, ஈரோடு 46, நீலகிரி 43 , தஞ்சாவூர் - 41 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. 


9 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தன

தமிழகத்திற்கு புனேவில் இருந்து 65 பெட்டிகளில் 7.66 லட்சம் கோவிஷூல்டு தடுப்பூசிகளும், ஐதரபாத்தில் இருந்து சென்னைக்கு 12 பெட்டிகளில் 1.33 லட்சம் கோவாக்‌சின் தடுப்பூசிகளும் சென்னை வந்தடைந்தன. 

தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கும் அரசாணை வெளியீடு.

கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 



 




இந்தியாவின் கோவாக்சினுக்கு செப்டம்பரில் அவசர ஒப்புதல்

கொரோனா மூன்றாம் அலைக்கு உலக நாடுகள் தயாராகிவரும் நிலையில் பல்வேறு தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்க உலக சுகாதார நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி இந்தியாவின் தயாரிப்பான கோவாக்சினுக்கு செப்டம்பர் மாதத்தில் ஒப்புதல் அளிக்கப்படும் என சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. ஒப்புதலுக்கான ஆய்வுகள் இறுதிகட்டத்தில் உள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. கோவாக்சினுக்கு இன்னும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் ஒப்புதல் அளிக்காதது குறிப்பிடத்தக்கது. 

தமிழ்நாட்டில் சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை நிலவரம்

மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,382 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்

தஞ்சாவூர் மாவட்டத்தின் தொற்று உறுதி விகிதம் 2.3 ஆக அதிகரித்துள்ளது

தொற்று உறுதி விகிதம்: தமிழ்நாட்டில் தினசரி  தினசரி தொற்று உறுதி விகிதம் (Daily positivity Rate) 3ம் குறைவாக 1.3 ஆக உள்ளது. அதாவது, பரிசோதிக்கப்படும் 100 கொரோனா மாதிரிகளில் குறைந்தது 2 பேருக்கும் குறைவானோருக்கு மட்டுமே  கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. 


கடந்த சில நாட்களாக அரியலூர் மாவட்டத்தில் இந்த எண்ணிக்கை விகிதம் அதிகரித்திருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே, தஞ்சாவூர் மாவட்டத்தின் தொற்று உறுதி விகிதம் 2.3 ஆக அதிகரித்துள்ளது. 0.5 விழுக்காடுக்கும் குறைவாக இருந்த சென்னையின் தொற்று உறுதி விகிதம் , தற்போது 0.8 ஆக அதிகரித்துள்ளது.சென்னையில், சராசரி தினசரி பரிசோதனை எண்ணிக்கை 25,௦௦௦ ஆக உள்ள நிலையில், தொற்று உறுதி விகிதம் 1க்கும் கீழாக இருப்பது நிம்மதி அளிக்க கூடிய வகையில் உள்ளது. 

சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது

கடந்த சில நாட்களாக குறைந்து வந்த மாநிலத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாட்களுக்குப் பிறகு, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.          

இங்கிலாந்தில் ஆல்பா கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை இதுவரை இல்லை - மா.சுப்பிரமணியன்

தமிழ்நாட்டில் கொரோனா 3-வது அலை இதுவரை இல்லை என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.  

தினசரி தொற்று உறுதி விகிதம் 2.16 சதவீதம்

கடந்த 24 மணி நேரத்தில் 17,77,962 பரிசோதனைகளும், இந்தியாவில் இதுவரை மொத்தம் 48,50,56,507 பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 2.34 சதவீதமாகவும், தினசரி தொற்று உறுதி விகிதம் 2.16 சதவீதமாகவும் இன்று பதிவாகியுள்ளது. தொடர்ந்து 65 நாட்களாக இந்த எண்ணிக்கை ஐந்து சதவீதத்திற்குக் குறைவாகவும், தொடர்ந்து 16 நாட்களாக இந்த எண்ணிக்கை மூன்று சதவீதத்திற்குக் குறைவாகவும் ஏற்பட்டுள்ளது.


 

குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.45 சதவீதமாக அதிகரிப்பு

நம் நாட்டில், இதுவரை மொத்தம் 3,12,20,981 பேர் கொவிட்  தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 40,013 பேர் குணமடைந்தனர். இதன் மூலம் குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.45 சதவீதமாக அதிகரித்துள்ளது.


 

தொடர்ந்து 45 நாட்களாக 50,000க்கும் குறைவாக தினசரி கொரோனா பாதிப்பு

கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேர் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 50,000க்கும் குறைவாக ஏற்பட்டு வருகிறது.

கூட்டம் கூடுவதாலேயே கொரோனா அதிகரிப்பு

கூட்டம் கூடுவதாலேயே தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரிப்பதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில் 300 பேர் பங்கேற்ற கூட்டத்தில் 24 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும், அதில் ஒருவர் மரணமடைந்ததாகவும் கூறினார்.

புதுச்சேரியில் மேலும் 114 பேருக்கு கொரோனா

புதுச்சேரியில் மேலும் 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி சுகாதாரத்துறை கூறியுள்ளது.  மொத்த பாதிப்பு 1,21,880 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 1,19,031 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,801 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்தது

இந்தியாவில் ஒரேநாளில் 38,353 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.  இந்தியாவில் 147 நாட்களுக்கு பிறகு நேற்று  பாதிப்பு 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றது. இந்தநிலையில், மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 497 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 40,013 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 20.47 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 20.47 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 43.25 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், 18.38 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,00,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 319 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Background

தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 1893 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 79 ஆயிரத்து 130 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 5 லட்சத்து 40 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்தோர் எண்ணிக்கை 1930 ஆக அதிகரித்துள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனா பாதிப்பால் குணம் அடைந்தோரின் எண்ணிக்கை 25 லட்சத்து 24 ஆயிரத்து 400 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று கொரோனா வைரசால் 209 பேர் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 1,684 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  சென்னையில் மட்டும் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 5 ஆக உயர்ந்துள்ளது.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.