Coronavirus LIVE Updates: புதுச்சேரியில் 101 பேருக்குக் கொரோனா!

உலகம், இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

Continues below advertisement

LIVE

Background

தமிழ்நாட்டில் நேற்று புதியதாக 1,997 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,69,398 ஆக அதிகரித்துள்ளது. 

குணமடைவோர் எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில் 1,943 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,15,030 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.88% குணமடைந்துள்ளனர்.  

இறப்பு எண்ணிக்கை:  கடந்த 24 மணிநேரத்தில், கொரோனா தொற்று காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா இறப்பு எண்ணிக்கை 34,230 ஆக அதிகரித்துள்ளது. 

சிகிச்சைப் பெறுவோரின் எண்ணிக்கை:  மாநிலத்தில், தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 20,138 ஆக உள்ளது. இதில், 3ல் ஒருவர் சென்னை, கோயம்பத்தூர், தஞ்சாவூர், ஈரோடு ஆகிய நான்கு மாவட்டங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில்   1299 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும், 3400 பேர் ஆக்சிஜன் உதவி கொண்ட படுக்கையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அதாவது, பாதிக்கப்பட்டவர்களில் 23% பேருக்கு தீவிர நுரையீரலைப் பாதிக்கும்   நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
Continues below advertisement
12:38 PM (IST)  •  10 Aug 2021

புதுச்சேரியில் 101 பேருக்குக் கொரோனா!

புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 101 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து அங்கே பாதிப்பு எண்ணிக்கை 1,21,766 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி புதுச்சேரியில் 58 பேரும், காரைக்காலில் 21 பேரும் மாஹேயில் 19 பேரும் ஏனத்தில் 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட 851 பேரில் 194 பேர் மருத்துவமனையிலும் 657 பேர் வீட்டிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

10:48 AM (IST)  •  10 Aug 2021

இந்தியாவில் 147 நாட்களுக்கு பிறகு கொரோனா பாதிப்பு குறைந்தது

இந்தியாவில் ஒரேநாளில் 28,204 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், இந்தியாவில் 147 நாட்களுக்கு பிறகு பாதிப்பு 29 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது. ஒரேநாளில் கொரோனாவுக்கு 373 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 41,511 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

08:47 AM (IST)  •  10 Aug 2021

உலகளவில் 20.40 கோடி பேருக்கு கொரோனா

உலகம் முழுவதும் 20.40 கோடி பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 43.15 லட்சம் பேர் உயிரிழந்த நிலையில், 18.32 கோடி பேர் குணமடைந்துள்ளனர். அமெரிக்காவில் புதிதாக 1,00,779 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 319 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.