இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இன்று காலை நிலவரப்படி 1,68,063 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்றும் 4,000க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நேற்று ஒரேநாளில் 13,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு என தமிழ்நாடு அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.






இதற்கிடையே கொரோனா தினசரி பரவும் விகிதம் 13.29 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்தது. இந்நிலையில் கொரோனா மூன்றாவது அலை இந்த மாத இறுதியில் உச்சம் தொடும் என ஐஐடி கான்பூர் பேராசிரியர் மணீந்திர அகர்வால் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் கூறுகையில், “ இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை உருவாகியுள்ளதால் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 




தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, நாடு முழுவதும் ஜனவரி மாதம் இறுதியில் கொரோனா பரவல் புதிய உச்சம் பெறும். இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்பைவிட இந்த அலையில் பாதிக்கப்படுவர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அதேசமயம் மார்ச் மாதம் மத்தியில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி மூன்றாவது அலை முடிவுக்கு வரும். 


டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இன்னும் ஒரு சில நாள்களில் கொரோனா பரவல் அதிவேகத்தில் இருக்கும். ஆனால் இந்த மாத இறுதியிலேயே நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும்.


தேர்தல் பொதுக்கூட்டங்களால் மட்டுமே கொரோனா பரவல் அதிகமாகவில்லை. பொதுக்கூட்டங்களை ரத்து செய்வதால் மட்டும் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்ற நினைப்பு தவறானது” என்று எச்சரித்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண