கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வருகிறது. இருப்பினும் மற்ற மாவட்டங்களை காட்டிலும் கூடுதலாக தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக  தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்புகளில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது. கோவையில் இன்று 220 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு இலட்சத்து 26 ஆயிரத்து 869 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில்  2927 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 391 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால்  குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்து 21 ஆயிரத்து 810 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் இன்று 4 பேர் உயிரிழந்தார். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2132 ஆக உள்ளது. கோவையில் கொரோனா தொற்று விகிதம் 2.7-ஆக குறைந்துள்ளது.


ஈரோடு,  திருப்பூர், நீலகிரி நிலவரம்


ஈரோடு மாவட்டம் தினசரி கொரோனா பாதிப்பில் தொடர்ந்து வெகுவாக குறைந்து வருகிறது. ஈரோட்டில் இன்று 128 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 216 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2220 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் இன்று ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 91944 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 89105 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 619 ஆகவும் உயர்ந்துள்ளது. ஈரோட்டில் தொற்று விகிதம் 1.8 ஆக குறைந்துள்ளது.




திருப்பூர் மாவட்டத்தில் இன்று 121 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 119 பேர் குணமடைந்துள்ள நிலையில், 1605 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்று 2 பேர் உயிரிழந்தனர். திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 86597 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 84179 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 813 ஆகவும் உள்ளது. திருப்பூரில் கொரோனா தொற்று விகிதம் 2.7 சதவீதமாக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று 54 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 64 பேர் குணமடைந்துள்ள நிலையில், 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 29864 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28776 ஆகவும் உயர்ந்துள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 172-ஆக உள்ளது. நீலகிரியில் கொரோனா தொற்று விகிதம் 2.2-ஆக உள்ளது.


தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.