வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.


உலகம் முழுவதும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தீவிரமாக பரவி வரும் சூழலில், இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவத் தொடங்கியதை அடுத்து அந்தந்த மாநிலங்கள் மீண்டும் ஊரடங்கை அறிவித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு, ஊரடங்கு அறிவிப்பில் கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் 50 சதவீதம் வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஐடி ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இந்த நிலையில், வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சத்தான உணவு, சுத்தமான குடிநீர், பழச்சாறுகள் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது.


வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சத்தான உணவு, சுத்தமான குடிநீர், பழச்சாறுகள் பருக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டும் எடுத்துக் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளது. 


வீட்டுத் தனிமையில் உள்ளோருக்கான வழிகாட்டு நெறிமுறைகள் 


 


* தனிக் கழிவறையுடன் கூடிய காற்றோட்டமான தனியறையில் தனிமைப்படுத்த வேண்டும்.


* வீட்டில் உள்ளவர்கள் தனிமையில் உள்ளோரின் அறையில் நுழையக்கூடாது.


* சுயதனிமையில் இருப்போர், சத்தான உணவை சாப்பிட வேண்டும்.


* மற்றவர்களுடன் தொடர்பு இல்லாதவாறு உணவை பெற வேண்டும்.


* போதுமான அளவு தண்ணீர், பழரசத்தை பருக வேண்டும்.


* பெரும்பாலும் பிறரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும். மீறி தொடர்பு கொள்ள நேரிட்டால் சர்ஜிக்கல் அல்லது  N95 முகக் கவசம் அணிந்து பேசுங்கள்.


* அடிக்கடி சோப்பு உபயோகித்து குறைந்தது 20 நொடிகள் நன்கு தேய்த்து கைகளைக் கழுவுங்கள் அல்லது ஆல்கஹால் கலந்த கிருமி நாசினியை பயன்படுத்துங்கள்.


* டாக்டரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மட்டும் சரியான நேரத்திற்கு எடுத்து கொள்ளுங்கள்.


* உங்கள் துணிகள் மற்றும் பாத்திரங்களை  நீங்களே சுத்தம் செய்யுங்கள். பொருட்களை மற்றவர்களிடம் பகிரக் கூடாது. கழிவுகளைத் தனிப் பையில் சேகரித்து அப்புறப்படுத்தவும்.


* பல்ஸ் ஆக்சிமீட்டரின் மூலம் ஆக்சிஜன் அளவையும் (SPO2), அபாய அறிகுறிகளையும் கண்காணியுங்கள்.


 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண