கரூர் மாவட்டத்தில் புதிதாக 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு.  இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் எண்ணிக்கை 23240 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 8 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 22718 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 352 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 170 ஆகும். 




கரூரில் இன்று 87 இடங்களில் 19,500 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக நாள்தோறும் 80க்கும் மேற்பட்ட இடங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்படுகிறது. இதனால் பொது மக்கள் சிரமமின்றி தடுப்பூசி போட்டுக் கொண்டு வருகின்றனர். கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது. பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. 




இந்நிலையில் கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 540 இடத்தில் பிரமாண்ட தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 61 நபர்கள்  கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 49411 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 48 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48333 ஆகும். 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 477 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 601 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. 




நாமக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் நாள்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,596 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 1,534 பேர் குணமடைந்த நிலையில் 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.