கரூர் மாவட்டத்தில் புதிதாக 15 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23406 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 21 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 22883 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 353 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 170 ஆகும். 


கரூரில் இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஒரு லட்சம் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து மாலை 6 மணி நிலவரப்படி 75% தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.




இதைத்தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாமும் நடைபெற்றுள்ளது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது. 


நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள். 


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 47 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 49994 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 81 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 48938 ஆகும். 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 480 ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 576 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி.


நாமக்கல் மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நாள்தோறும் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகின்றன. 


தமிழகத்தில் இன்று தொற்று பாதித்தவர்கள் விவரம் - 




தமிழகத்தில் இன்று புதிதாக 1,697 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. தொற்று பாதித்தவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 1,594. இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 27 .  தமிழகத்தில் கொரொனோ தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 16,969 ஆக உள்ளது.


தமிழக அரசு அறிவித்துள்ள கொரொனோ விதிகளை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக குறைந்து கொண்டு வருகிறது.