தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பில் தொடர்ந்து சென்னை முதல் இடத்தில் இருந்து வருகிறது. இன்று சென்னையை தவிர்த்த மற்ற அனைத்து மாவட்டங்களிலும் தினசரி தொற்று பாதிப்புகள் ஒற்றை இலக்கத்திற்குள் பதிவாகியுள்ளது. இன்று கொரோனா தொற்று பாதிப்பில் செங்கல்பட்டு இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்படவில்லை.


கோவையில் கடந்த சில வாரங்களாக தினசரி கொரோனா தொற்று பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. மேலும் ஒற்றை இலக்கத்திற்குள் மட்டுமே கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கோவையில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 29 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இன்று கொரோனா தொற்றில் இருந்து 2 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பவர்களின் எண்ணிக்கையை விட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 27 ஆயிரத்து 326 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை இதனால் கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2617 ஆக உள்ளது.


ஈரோடு,, திருப்பூர்,, நீலகிரி நிலவரம்


ஈரோட்டில் இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். தொற்று பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. ஈரோடு மாவட்டத்தின் மொத்த கொரோனா பாதிப்புகள் 132668 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 131933 ஆகவும், மொத்த உயிரிழப்புகள் 734 ஆகவும் உள்ளது.


திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல இன்று யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மருத்துவமனைகளில் தொற்று பாதித்த 4 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பால் இன்றும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை. திருப்பூரின் மொத்த கொரோனா பாதிப்புகள் 129933 ஆகவும், குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 128877 ஆகவும் உள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1052 ஆக உள்ளது.


நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படவில்லை. அதேபோல யாரும் குணமடைந்து வீடு திரும்பவில்லை. மருத்துவமனைகளில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகின்றார். தொற்று பாதிப்பால் இன்று உயிரிழப்புகள் ஏற்படவில்லை. நீலகிரி மாவட்டத்தின் மொத்த பாதிப்புகள் 42131 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 41904 ஆகவும் உள்ளது. மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 226ஆக உள்ளது.