கரூர் மாவட்டத்தில் இன்று புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு இல்லை . இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்களின் எண்ணிக்கை 29,755 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் குணமடைந்தவர்கள் 0 நபர்கள். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் 2 நபர்கள் உள்ளனர். கரூரில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழப்பு இல்லை.




கரூர் மாவட்டத்தில்  இன்று 12 வயது முதல் 14 வயது உடைய மாணவ, மாணவிகளுக்கான தடுப்பூசி முகாம் அந்தந்த பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. மேலும், கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.




நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்.


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக தொற்று பாதிப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 68006 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 0 பேர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 67,470 நபர்கள். 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் உயிரிழப்பு இல்லை . நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 534 நபர்கள். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 02 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் தலைமை அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி முகாம் நடைபெற்ற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு வருகின்றனர்.



 


கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X


தமிழகத்தில் இன்று 29 நபர்கள் புதிதாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவோர் 27 நபர்கள் ஆகும். கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்கள் இன்று 0 நபர்கள். தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சையில் 228 நபர்கள் உள்ளனர்.  மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பாக அனைத்து மாநிலத்திலும் கொரோனா  கட்டுப்பாடுகள் முழுவதுமாக தளர்த்த  பட்டு உள்ளது. கரூர், நாமக்கல் மாவட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் முகக் கவசம் அணியாமல் சுதந்திரமாக தங்களது பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.