கரூர் மாவட்டத்தில் புதிதாக 22 நபர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23667 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று வீடு திரும்புவோர் 18 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இதுவரை வீடு திரும்புவோர் 23075 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று வரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 355 நபர்கள் ஆகும். கரூர் மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள நபர்கள் 177 ஆகும். 





கடந்த ஞாயிற்றுக்கிழமை 50 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், கரூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 இடங்களில் 14,450 தடுப்பூசிகள் போடப்பட உள்ளது. எனினும் நாள்தோறும் பத்துக்கும் மேற்பட்ட பஞ்சாயத்துகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. கரூர் நகர பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய தடுப்பூசி சிறப்பு மையமும் செயல்பட்டு வருகிறது.




நாமக்கல்லில் கொரோனா தொற்று பாதித்தவர்கள்..


நாமக்கல் மாவட்டத்தில் இன்று புதிதாக 58 நபர்கள் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்கள் 50680 நபர்களாகும். நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 54 நபர்கள் ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை முடிந்து வீடு திரும்பியோர் 49,663 நபர்களாக உள்ளனர்


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


 




நாமக்கல் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு. நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் 487 நபர்கள் ஆகும். தற்போது நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக 530 நபர்கள் மருத்துவமனையில் அனுமதி. நாமக்கல் மாவட்டத்தில் இன்று 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.



நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பஞ்சாயத்துகளில் காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை நடைபெறும் காய்ச்சல் முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகின்றனர்


தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா விதிகளை பின்பற்றவேண்டும் என மாவட்ட நிர்வாகம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு நாள்தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை சராசரியாக குறைந்து கொண்டு வருகிறது. இதனால் மாவட்ட மக்கள் நிம்மதியடைந்தனர்.