Tamil Nadu Coronavirus Highlights: தமிழ்நாட்டில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு
தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,895 ஆக உள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளை, நாளை மறுநாள் கோவாக்சின் தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெறுகிறது. கோவாக்சின் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் முகாமில் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், போர்ச்சுகல், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளில் டெல்டா பிளஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் 22 பேருக்கு இந்த தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கேரளா, மகாராஷ்டிராவில் டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது - மத்திய அரசு
இந்தியாவில் கொரோனா தொற்றுப்பரவும் விகிதம் குறைந்துள்ள போதிலும் கொரோனா இரண்டாவது அலை முடிவடைய சிறிது காலம் ஆகும். புதிய உருமாற்ற வைரஸ்கள் பரவி வருவதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
கொரோனா 3ஆவது அலையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, கொரோனா மூன்றாவது அலை கட்டாயம் வரும் என்று மருத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலங்களுக்கு இடையே எந்த பாகுபாடும் காட்டாமல் அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான எண்ணிக்கையில் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். கொரோனா மூன்றாவது அலைக்கு அனைவரும் தயாராக இருக்க வேண்டும். கடந்த கால தவறுகளை மத்திய அரசு மீண்டும் செய்தால் கொரோனா பாதிப்பு மீண்டும் தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இன்று காலை 9 மணி நிலவரப்படி நாடு முழுவதும் புதியதாக 42 ஆயிரத்து 640 பேருக்கு கொரோனா பாதிப்பு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் 1,167 நபர்கள் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 89 ஆயிரத்து 302 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் டெல்டா பிளஸ் கொரோனா வைரசின் தாக்கம் மூன்று மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ராவில் 21 பேருக்கும், கேரளாவில் 3 பேருக்கும், மத்திய பிரதேசத்தில் 4 பேருக்கும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
Background
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 6 ஆயிரத்து 895 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,65,375 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 6,895 ஆக உள்ளது.
இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 36 ஆயிரத்து 819 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 30 ஆயிரத்து 34 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 410 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை 870, ஈரோடு 741, சேலம் 485, திருப்பூர் 434, தஞ்சாவூர் 372, செங்கல்பட்டு 286, நாமக்கல் 274, திருச்சி 231, திருவள்ளூர் 191, கடலூர் 179, திருவண்ணாமலை 178, கிருஷ்ணகிரி 155, நீலகிரி 139, கள்ளக்குறிச்சி 134, மதுரை 125, ராணிப்பேட்டை 116, குமரி 110, நாகை 107, தருமபுரி 104, விழுப்புரம் 103 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவால் மேலும் 194 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31,580 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 136 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 58 பேரும் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் 24 பேர் உயிரிழந்தனர். சேலம் 23, கோவை 19, திருப்பூர் 13, திருவள்ளூர் 8, வேலூர் 7, நாகை, நாமக்கல்லில் தலா 6 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 41 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 38 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 56,886 ஆக உள்ளது.
12 வயதிற்குட்பட்ட 219 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -