கரூர் மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது நாளை தொடக்கம் முதல் தொடர்ந்து தடுப்பூசிகள் விரைவாக செலுத்தப்பட்டது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அன்று முதல் இன்று வரை தடுப்பூசி மொத்தமாக 357742 தடுப்பூசிகள் இதுவரை போடப்பட்டு இருப்பதாகவும், இன்று ஒரே நாளில் 2580 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல்.
அதன்படி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி 1215 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 732 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், பழைய அரசு மருத்துவமனையில் முதல் டோஸ் தடுப்பூசி 517 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசி 290 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் முதல் டோஸ் தடுப்பூசி 4081 நபர்களுக்கும் இரண்டாவது டோஸ் தடுப்பூசி 2612 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் முதல் டோஸ் தடுப்பூசி 2190 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 175 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.
அதேபோல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 563 நபர்களுக்கும் ,இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 153 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 1043 நபர்களுக்கும் , இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 523 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.
அதேபோல், கரூர் மாவட்டத்தில் வருவாய் துறை அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 212 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 13 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் பிற முன்னணி தொழிலாளர்கள் மற்றும் டிஆர் துறை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு என முதல் டோஸ் தடுப்பு ஊசி 3893 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 1934 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது.
அதேபோல், கரூர் மாவட்டத்தில் தேர்தல் காலத்தில் பணியாற்றிய ஆபீஸர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு முதல் டோஸ் தடுப்பு 3026 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 336 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளது. அதேபோல், கரூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இதுவரை முதல் டோஸ் தடுப்பு ஊசி 2 லட்சத்து 59 ஆயிரத்து 114 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 72 ஆயிரத்து 524 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று பொதுமக்களுக்கு முதல் டோஸ் தடுப்பு ஊசி 1798 நபர்களுக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி 782 நபர்களுக்கும் போடப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல். கரூர் மாவட்டத்தில் இன்று வரை 3 லட்சத்து 57 ஆயிரத்து 742 நபர்களுக்கு இதுவரை தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 580 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் சராசரியாக 10 லட்சம் மக்கள் தொகை இருக்கும் நிலையில் தற்போது போடப்பட்டுள்ள தடுப்பூசியின் நிலவரத்தை வைத்து பார்க்கும்பொழுது 40 சதவீத தடுப்பூசிகள் போடப்பட இருப்பதாகவும், இன்னும் 60 சதவீத தடுப்பூசிகள் போட வேண்டிய உள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூர் மாவட்டத்தில் 10-க்கு மேற்பட்ட சிறப்பு முகாம் மூலம் நாள்தோறும் தடுப்பூசிகள் போட்டு வருகின்றனர். அதேபோல் நாள்தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை காய்ச்சல் முகாம் நடைபெற்று வருகிறது. ஒருபுறம் நாள்தோறும் தடுப்பூசியும் போட்டு வரும் நிலையில் தொற்று பாதித்தவர்கள் நாள்தோறும் சராசரியாக 20 உட்பட்ட நபர்கள் பதிவாகி வருகின்றன.
தற்போதுள்ள சூழ்நிலையில் மூன்றாவது அலை பரவ வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார துறை தகவல் தெரிவித்துள்ள நிலையில், விரைவாக மாவட்ட மக்களுக்கு தடுப்பூசியை செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கி வரக்கூடிய மூன்றாவது அலைலிருந்து மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.