தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு கடந்த மாதம் உச்சத்தில் இருந்த நிலையில், ஊரடங்கு உள்பட தமிழக அரசு விதித்த பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழ்நாட்டில் இன்று 2 ஆயிரத்து 458 நபர்களுக்கு புதியதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,46,394 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் பாதிப்பு 2,458 ஆக உள்ளது.


இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25 லட்சத்து  26 ஆயிரத்து 401 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 5 லட்சத்து 35 ஆயிரத்து 588 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் இன்று 153 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே 160 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 153 ஆக உள்ளது.


கோவை 270, ஈரோடு 175, தஞ்சை 171, சேலம் 164, திருப்பூர் 146, செங்கல்பட்டு 131, கடலூர் 95, திருச்சி 94, திருவண்ணாமலை 74, நீலகிரி 68, நாமக்கல் 66, கள்ளக்குறிச்சி 65, திருவள்ளூர் 64, கன்னியாகுமரி 55, சிவகங்கை  45, விழுப்புரம் 44, கிருஷ்ணகிரி 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 




கொரோனாவால் மேலும் 55 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,557 ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 39 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 16 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இணை நோய்கள் இல்லாத 20 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 5 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மட்டும் மொத்தம் 8272 பேர் உயிரிழந்துள்ளனர்.


அதிகபட்சமாக கோவையில் 8 பேர், சென்னை மற்றும் தஞ்சாவூரில் தலா 5 பேர் உயிரிழந்துள்ளனர். 11 மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு  பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 30,600 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து மேலும் 3,021 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 24,62,244 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.


 






12 வயதிற்குட்பட்ட 116 சிறார்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இவர்களுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் குறைந்துள்ளது. இன்று மாநிலம் முழுவதும் 40,026 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 26,569 ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகளும், 7285 ஐசியு படுக்கைகளும் பயன்பாட்டுக்கு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை கூறியுள்ளது. 


பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது, தேவையில்லாமல் வெளியில் செல்லாமல்இருப்பது, சமூக இடைவெளியை முறையாக கடைபிடிப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக கையாண்டால் கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். 


Corona Vaccine | செங்கல்பட்டு மையத்தில், பாரத் பயோடெக் உட்பட தடுப்பூசி தயாரிக்க 3 நிறுவனங்கள் விருப்பம் எனத் தகவல்..!