இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புகள் திடீரென உயர்ந்து வரும் நிலையில், அனைவரும் அவரவர்களின் நுரையீரலின் ஆரோக்கியத்தை பேணவேண்டிய அவசியம் அதிகரித்துள்ளது. நுரையீரலுக்குச் செல்வதற்கு முன், வாய் மற்றும் மூக்கு வழியாக உடலில் நுழையும் வைரஸ், அல்வியோலியை எரித்து, தீங்கு விளைவிக்கிறது. பின்னர் ஆக்ஸிஜன் பரிமாற்றத்தைத் தடுக்கிறது.
நுரையீரல் ஆரோக்கியம்
நுரையீரல் அல்வியோலி எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய காற்றுப் பைகளால் ஆனது, அவை இரத்த ஓட்டத்திற்கும் நாம் சுவாசிக்கும் காற்றுக்கும் இடையில் வாயுக்களை பரிமாறிக் கொள்கின்றன. சளியை உற்பத்தி செய்வதன் மூலமும், சுவாசக் குழாயில் இருந்து நச்சுகள் மற்றும் தேவையற்ற விஷயங்களை அகற்றுவதன் மூலம் உடலின் pH சமநிலை மற்றும் நோயெதிர்ப்பு பாதுகாப்பை பராமரிக்கின்றன. கொரோனா முதலில் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால், நுரையீரல் ஆரோக்கியம் மிகவும் அவசியமாகிறது. நுரையீரல் ஆரோக்கியமாக இருந்தால், கடுமையான நோய் அல்லது வைரசால் ஏற்படும் சிக்கல்களின் அபாயம் குறைகிறது.
நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில வழிகள்:
புகைபிடிப்பதை நிறுத்தவும்
புகைபிடித்தல் சுவாச மண்டலத்தை சேதப்படுத்துவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்துகிறது. இது கொரோனா உட்பட பல தொற்றுநோய்கள் மிகவும் எளிதில் பாதிக்க வழி வகுக்கிறது. ஆரோக்கியமான நுரையீரலை பேன நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் புகைபிடிப்பதை நிறுத்துவதாகும்.
ஆழ்ந்த சுவாசத்தைப் பயிற்சி
ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் நுரையீரல் திறனை விரிவுபடுத்தவும், சுவாச தசை வலிமையை மேம்படுத்தவும் உதவும். உதரவிதான சுவாசம் (diaphragmatic breathing) அல்லது பர்ஸ்டு-லிப் சுவாசம் போன்ற நுட்பங்களை தினசரி வழக்கத்தில் சேர்த்துக்கொள்ள முயற்சிக்கவும்.
காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும்
புகை, காட்டுத் தீயில் இருந்து வரும் புகை மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் போன்ற வெளிப்புற காற்று மாசுபாட்டின் வெளிப்பாட்டை உடலில் சேராத வண்ண விலகி இருக்க முயற்சிக்கவும். இவை நுரையீரலை எரிச்சலடையச் செய்யலாம். மேலும் அது சுவாசத் தொற்று அபாயத்தை அதிகரிக்கும்.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள்
வழக்கமான உடற்பயிற்சி நுரையீரல் திறனை மேம்படுத்துகிறது மற்றும் சுவாச தசைகளை பலப்படுத்துகிறது, இது உங்கள் நுரையீரல் மிகவும் திறமையாக செயல்பட உதவுகிறது. சுறுசுறுப்பான நடைபயிற்சி அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற மிதமான உடற்பயிற்சிகள் கூட உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்திற்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான உணவைப் பராமரிக்கவும்
ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்கள் கொண்ட சீரான உணவை உட்கொள்வதன் மூலம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்கள் போன்ற நுரையீரலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். வைட்டமின் டி கொண்ட மீன், முட்டை அல்லது பால் பொருட்களை சேர்ப்பது, சுவாச தொற்று ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது.
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்
போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் நுரையீரல் மற்றும் காற்றுப்பாதையில் மெல்லிய சளி உருவாக உதவுகிறது. மேலும் அது இருமல் மற்றும் காற்று வெளியேற்றத்தை எளிதாக்குகிறது. உடலுக்கு சரியான அளவு நீரேற்றம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை நன்றாக செயல்பட வைக்க உதவுகிறது.
நல்ல சுகாதாரத்தை கடைபிடிக்கவும்
சோப்பு மற்றும் தண்ணீரால் அடிக்கடி கைகளை கழுவுதல், உங்கள் முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது நல்லது. இருமல் அல்லது தும்மலின் போது உங்கள் வாய் மற்றும் மூக்கை டிஷ்யூ பேப்பராலோ, பின் கையாலோ மூடுவது நல்லது. இது கோவிட்-19 உட்பட சுவாச தொற்றுகள் பரவாமல் தடுக்க உதவும்.