உடல் நலம் காக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ஆயுர்வேத முறைப்படி, சமைக்கும் முறைகளில் மட்டுமல்லாமல், சமைக்கும் பாத்திரங்களிலும் முக்கியத்துவம் காட்டினார்கள். மூலிகைகள் கொண்டும், தங்கம், வெள்ளி, மரகதங்கள், மாணிக்கங்களால் ஆன பாத்திரங்களை பயன்படுத்தினார்கள். இது ஒவ்வொரு பாத்திரத்திற்கு ஒரு பயன்பாடும், அதற்கான பயன்களும் இருக்கிறது.


ஆனால் இன்றைய நவீன, உலகில், விரைவில் சமைப்பதற்கு ஏற்றவாறு பொருள்கள் மாறுபடுகிறது. எஃகு, கண்ணாடி, எவர் சில்வர், நான் ஸ்டிக் போன்ற பொருள்களை பயன்படுத்துகின்றனர். இதனால் உடலுக்கு தீங்கு விளைகிறது.  நீண்ட நாட்களாக இதை பயன்படுத்தி கொண்டு இருப்பதால், உடலுக்கு நிறைய தீமைகள் விளைகிறது. இதை தவிர்த்து என்ன பாத்திரங்களை பயன்படுத்தினால் உடலுக்கு என்ன நன்மை விளைகிறது என தெரிந்து கொள்ளலாம்.


காப்பர் / தாமிரம் பாத்திரத்தின் பயன்கள்


சாதம் வைப்பதற்கு மிகவும் ஏற்றது. இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்ற உதவும். இது உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க உதவுகிறது. இரவில் தாமிர பாத்திரத்தில் நீரை வைத்து காலை எழுந்தவுடன் குடிப்பது தோலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். தாமிர பாத்திரத்தில் உணவை வைத்து சாப்பிடுவது, கபம் கட்டுவதை குறைக்கும். உடலில் கபம் அதிகம் இருப்பதாக தெரிந்தால், காப்பர் பயன்படுத்தலாம். இது வளர்சிதை மாற்றம் சீராக இயங்க உதவும். 




வெள்ளி பாத்திரத்தல் பயன்கள்


வெள்ளி பாத்திரத்தில் சமைத்து சாப்பிடுவது, உடலுக்கு குளிர்ச்சியை தரும். உடலில் பித்தம் அதிகமாக இருந்தால், வெள்ளி பயன்படுத்தலாம். இந்த வெள்ளி ஆனது ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். உடலில் வீக்கம் ஆகாமல் குறைக்கும்.




பித்தளை பாத்திரத்தில் பயன்கள்


பித்தளை பாத்திரத்தை சமையலுக்கு பயன்படுத்துவது, அதில் உணவை வைத்து சாப்பிடுவது, ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துகிறது. மேலும் உடலை சமநிலையில் இயங்க உதவுகிறது.




வெண்கல பாத்திரத்தின் பயன்கள்


இந்த பாத்திரத்தை உணவுக்கு பயன்படுத்துவது, மிகவும் நல்லது. உடல் எடை குறைக்க உதவும், கண் பார்வை தெளிவாக இருக்கும். தோலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.




தங்க பாத்திரத்தின் பயன்கள்


தட்டுகள், ஸ்பூன்கள் என உணவை சாப்பிட தங்கத்தை பயன்படுத்துகிறது. தங்கத்தை பயன்படுத்துவது ராயலாக இருந்தாலும், இதில் உடலுக்கு நிறைய நன்மைகள் இருக்கும். விந்தணு தரத்தை மேம்படுத்துகிறது. இது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது நினைவாற்றலை மேம்படுத்துகிறது.




மண் பாத்திரத்தின் பயன்கள்


மண் பாத்திரத்தில் சமைப்பது, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுகிறது. இது உடலின் வாதம், பித்தம், கபம் ஆகியவற்றை சமநிலையில் வைக்க உதவுகிறது.



பாத்திரங்கள் வெறுமனே பாண்டங்கள் அல்ல. அவற்றின் குணமறிந்து தான் நம் முன்னோர் அவற்றை பயன்படுத்தி வந்துள்ளனர்.