கற்றாழை எல்லா பருவகாலங்களிலும் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய செடிகளில் ஒன்று. எவ்வித கூடுதல் மெனக்கெடலும் இல்லாமல் வளர்க்கக் கூடிய செடி வகைகளில் ஒன்று... இதற்கு பல மருத்துவ குணங்களும் உள்ளன. 






ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது


கற்றாழையில் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இதன் காரணமாக அவை அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் மனித உடலை சேதப்படாமல் பாதுகாக்க உதவுகின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைக்கின்றன.


கற்றாழை தோல் தோற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் தோல் நிலைகளுக்கு சிகிச்சையளிக்கிறது


கற்றாழையின் பல நன்மைகள் தோலுடன் தொடர்புடையவை. 12 வாரங்கள் தொடர்ச்சியாக கற்றாழைச் சாறைத் தடவிவரும் நிலையில் அது 46 வயதிற்குட்பட்ட ஆண்களின் தோலின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதாக ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில் கற்றாழையை உட்கொள்வது கொலாஜன் உற்பத்தியை மேம்படுத்துகிறது மற்றும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களின் தோல் சுருக்கங்களைக் குறைக்கிறது எனவும் தெரிய வந்துள்ளதாம்.


நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் சிகிச்சையாகப் பலனளிக்கலாம்


கற்றாழை சாற்றை உட்கொள்வது வகை 2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்காது என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியிருந்தாலும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள நபர்கள் (Prediabetic) நேர்மறையான மாற்றங்களைக் கண்டுள்ளனர். மற்றொரு ஆய்வில், கற்றாழை சாறு நீரிழிவு நோய்க்கு முந்தைய இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொழுப்பு அமில அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகக் காட்டுகிறது.


செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது:


கற்றாழை சாற்றில் ஆந்த்ராகுவினோன் கிளைகோசைடுகள் உள்ளன. இவை மலப்போக்கை இளகவைக்கும் விளைவுகளைக் கொண்ட தாவர கலவைகளைக் கொண்டுள்ளன மற்றும் மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றன. ஆனால் இது குறித்த ஆராய்ச்சி வரையறுக்கப்பட்டுள்ளது என்பதால் இதுகுறித்த அறுதியிட்ட தகவல்கள் எதுவும் நமக்குக் கிடைக்கவில்லை


பல் மற்றும் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த:


கற்றாழை சாறு அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் காரணமாக வாய் மற்றும் பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும், மூன்று மாதங்களுக்கு தினமும் 1 அவுன்ஸ் கற்றாழை சாறு வாய்வழி அருந்தி வருவது சப்மியூகஸ் ஃபைப்ரோஸிஸை மேம்படுத்த உதவுகிறது, இது வாயில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நாள்பட்ட நிலையாகும்...