Apollo Childrens Hospital: அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையானது, தீவிரமான தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமியின் உயிரை காப்பாற்றி சாதனை படைத்துள்ளது.

Continues below advertisement

சிறுமிக்கு தீவிர தைராய்ட் புற்றுநோய் அறுவை சிகிச்சை

சென்னையில் உள்ள அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை, குழந்தைகள் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறையில் குறிப்பிடத்தக்க மைல்கல் சாதனையைப் படைத்துள்ளது. இந்தியாவில் மிக தீவிரமான தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட [aggressive thyroid cancer], இளம் நோயாளியான, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 5 வருடம் 10 மாதம் வயதுடைய சிறுமிக்கு வெற்றிகரமாக சிகிச்சை அளித்து புதிய வரலாறு படைத்துள்ளது. பரவலான கட்டியுடன் கூடிய பாபிலரி தைராய்ட் கார்சினோமா [Papillary Thyroid Carcinoma with extensive metastases] எனப்படும் தைராய்டு புற்றுநோய் கண்டறியப்பட்ட இக்குழந்தைக்கு, மிகவும் சிக்கலான தைராய்ட் முழுவதுக்குமான அறுவை சிகிச்சையான  டோட்டல் தைரோடெக்டமி [total thyroidectomy] மற்றும் இருபக்க கழுத்து அறுவை சிகிச்சை [bilateral neck dissections] போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் மூலம், இச்சிறுமி குறிப்பிடத்தக்க வகையில் முழுமையாக குணமடைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்கது.

அறுவை சிகிச்சைக்கு ஆயத்தம்..

இச்சிறுமியின் கழுத்தில் ஒரு வீக்கம் இருப்பது பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் அவரது தந்தை, அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் அச்சிறுமியை சிகிச்சைக்காக சேர்த்தார். நிபுணத்துவமிக்க, முழுமையான பரிசோதனைகளுக்குப் பிறகு, குழந்தைகளில் அரிதாகக் காணப்படும் மற்றும் தீவிரத்தன்மை கொண்ட பாபிலரி தைராய்ட் கார்சினோமா (தைராய்ட் புற்றுநோய்) இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Continues below advertisement

சிறுமியின் கழுத்தில் முக்கிய அமைப்புகளுக்கு அருகில் கட்டி இருந்ததால், மூத்த ஆலோசகர் ஈ.என்.டி மற்றும் தலை & கழுத்து அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாலாஜி [Dr. Balaji, Senior Consultant ENT and Head & Neck Surgeon] இந்த அறுவை சிகிச்சைக்கு தலைமை தாங்கினார். தலை மற்றும் கழுத்து உடற்கூறியல் பற்றிய நிபுணத்துவம் மற்றும் நுண்-அறுவை சிகிச்சை (micro-dissection) ஆகியவற்றில் டாக்டர் பாலாஜிக்கு இருக்கும் ஆழ்ந்த நிபுணத்துவம், சிறுமியின் கழுத்தில் மிகவும் சிக்கலான இடத்தில் இருந்த கட்டியை பாதுகாப்பாகவும் முழுமையாகவும் அகற்றுவதற்கு முக்கிய அம்சமாக இருந்தது. குழந்தை மருத்துவம் சார்ந்த புற்றுநோயியல் நிபுணர்கள், நாளமில்லா சுரப்பியல் நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய [paediatric oncologists, endocrinologists, anaesthetists] பல்துறை சிறப்புச் சிகிச்சை குழு, இந்த மருத்துவ நடைமுறையை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை தனது பராமரிப்பு ஆதரவவை வழங்கியது.

அறுவை சிகிச்சைக்கான மருத்துவர் குழு

இந்தப் பல்துறை மருத்துவர்கள் அடங்கிய சிறப்பு குழுவில் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலாஜி [Dr. Balaji, ENT Surgeon, Apollo Children’s Hospitals], அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் தலை மற்றும் கழுத்து மற்றும் கபாலம் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஸ்ரீபிரகாஷ் துரைசாமி [Dr. Sriprakash Duraisamy, Consultant, Head & Neck and skull base surgery, Apollo Childrens Hospital] அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவு காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஜீனத் மலாவத் [Dr. Jeenat Malawat consultant, Pediatric ENT Surgeon at Apollo Children's Hospital] ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

நுட்பமான அறுவை சிகிச்சை

வரலாற்று சிறப்புமிக்க இந்த அறுவை சிகிச்சையின் போது, புற்றுநோய் கட்டி கழுத்துப் பகுதியில் தீவிரமாக பரவியிருப்பது [extensive metastatic spread] கண்டறியப்பட்டது. கழுத்தில் உள்ள முக்கிய ரத்த நாளங்கள் மற்றும் நரம்புகள் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளை பாதுகாப்பதில் அறுவை சிகிச்சை குழு வெற்றிகரமாக செயல்பட்டது. இருப்பினும், கட்டி இடது குரல்வளையைச் நரம்பை (left recurrent laryngeal nerve) சுற்றியிருந்ததால், கட்டியை முழுமையாக அகற்றி, மீண்டும் வருவதைத் தடுக்க அந்த நரம்பை கவனமாக நீக்க வேண்டியிருந்தது.. இந்த சிக்கலான மருத்துவ நடைமுறையானது மிக நுணுக்கமாக மேற்கொள்ளப்பட்டது.  அறுவை சிகிச்சைக்குப் பின் செய்யப்பட்ட ரேடியோஅயோடின் ஸ்கேன் (postoperative radioiodine scan) எந்தவிதமான கதிரியக்க ஐசோடோப்பும் குறிப்பிட்டு சொல்லுமளவிற்கு உடலில் உறிஞ்சப்படவில்லை என உறுதி செய்தது. இந்த பரிசோதனை முடிவு புற்றுநோய் வெற்றிகரமாக அகற்றப்பட்டுவிட்டதைக் குறிக்கிறது.

சிகிச்சைக்குப் பின் குணமடையும் சிறுமி

அறுவை சிகிச்சைக்குப் பின் அச்சிறுமி நலமுடன் இருக்கிறாள்.  அறுவை சிகிச்சை காயம் ஆறிவிட்டது, குரல் கிட்டத்தட்ட வழக்கமான இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. மேலும் இச்சிறுமி சுறுசுறுப்பான, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறாள். அவளது மனவுறுதியும், குணமடைந்த விதமும், இன்று தீவிர தைராய்ட் புற்று நோய் அறுவை சிகிச்சையில், நம்பிக்கையையும், குணமடைதலையும், குறிக்கும் ஒரு சக்திவாய்ந்த கதையாகும். மேலும், ஆரம்பகாலத்திலேயே நோயறியும் பரிசோதனைகள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிகிச்சைகளுக்கும் இருக்கும் வலிமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பெருமிதம்

இந்த அறுவை சிகிச்சை குறித்து பேசிய அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். பாலாஜி [Dr. Balaji, ENT Surgeon, Apollo Children’s Hospitals] கூறுகையில், "இது மிக அரிதாக ஆனால் சவாலான அறுவை சிகிச்சையாகும். இந்தளவிற்கு இளம் வயதுடைய குழந்தைக்கு, பாபிலரி தைராய்ட் கார்சினோமாவிற்கு முழு தைராய்டெக்டமி மற்றும் இருபுறமும் மைய மற்றும் பக்க கழுத்து அறுவை சிகிச்சைகளை செய்தது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும். இந்த அறுவை சிகிச்சையின் வெற்றி, ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிதல், மேம்பட்ட அறுவை சிகிச்சை நுட்பங்கள் மற்றும் திறமையான பல்துறை சிறப்பு சிகிச்சையிக்கான அணுகுமுறை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. குழந்தை நலமுடன் குணமடைந்து, இயல்பு வாழ்க்கையை தொடர்வதைக் காண்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்," என்றார்.

அப்போலோ மருத்துவமனைகள், சென்னை பிராந்தியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர். இளங்குமாரன் கலியமூர்த்தி [Dr. Ilankumaran Kaliamoorthy, CEO, Apollo Hospitals, Chennai Region] இந்த அறுவை சிகிச்சை குறித்து கூறுகையில், "இந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனை, மிகவும் சிக்கலான நிகழ்வுகளில் கூட உயிர்காக்கும் முடிவுகளை வழங்குவதற்காக, இரக்க உணர்வுடன் மருத்துவ நிபுணத்துவத்தை இணைக்கும் அப்போலோ மருத்துவமனையின் அர்ப்பணிப்பைக் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது.  இந்தியாவின் மிக இளைய தைராய்ட் புற்றுநோய் மருத்துவ பயனாளருக்கு நாங்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்திருப்பது, குழந்தைகள் மருத்துவத்தில் எங்களுடைய நிபுணத்துவமிக்க திட்டங்களின் வலிமையையும், எங்கள் மருத்துவமனை  வாசல்களில் நுழையும் ஒவ்வொரு குழந்தை மற்றும் குடும்பத்திற்கும் உயர்தர சிகிச்சையைக் கொண்டு சேர்க்கும் எங்கள் அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கிறது," என்றார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க அறுவை சிகிச்சை, இந்தியாவில் குழந்தைகள் புற்றுநோயியலில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கியிருக்கிறது. இளம் வயதுடைய அதே நேரம் மிகவும் சிக்கலான நிலமையில் இருக்கும் மருத்துவ பயனாளர்களுக்கு உலகத்தரமான சிகிச்சை முடிவுகளை வழங்கும் அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் நிபுணத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் வகையில் அமைந்திருக்கிறது.

அப்போலோ மருத்துவமனை பற்றி:

1983 -ல் டாக்டர் பிரதாப் சி ரெட்டி சென்னையில் முதல் அப்போலோ மருத்துவமனையைத் [Apollo Hospitals Enterprise Ltd. (Apollo)] தொடங்கியதன் மூலம், இந்திய மருத்துவ உலகில் அப்போலோ ஒரு மிகப் பெரிய மருத்துவப் புரட்சியை ஏற்படுத்தியது. இன்று இந்தியாவின்  மிகவும் நம்பகமான ஒருங்கிணைந்த மருத்துவ நல குழுமமாக திகழும் அப்போலோ மருத்துவமனைகள், 10,400-க்கும் அதிகமான படுக்கை வசதிகளுடன், 74 மருத்துவமனைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264--க்கும் அதிகமான கிளினிக்குகள் மற்றும்  2,182-க்கும் அதிகமான டயக்னோஸ்டிக் மையங்கள், 800-க்கும் அதிகமான டெலி மெடிசின் மையங்கள், என இந்தியாவின் மிகப் பெரிய ஒருங்கிணைந்த மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமாக அப்போலோ முன்னணியில் உள்ளது. 3,00,000-க்கும் அதிகமான அஞ்சியோப்ளாஸ்ட்களும், 2,00,000—க்கும் அதிகமான இதய அறுவைச் சிகிச்சைகளையும் செய்திருப்பதன் மூலம் உலகின் முன்னணி இதய நோய் சிகிச்சை மையமாக முக்கியத்துவம் பெற்றிருப்பதோடு, புற்று நோய் சிகிச்சையில் உலகின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகவும் திகழ்கிறது.

நவீன கால தொழில்நுட்பங்கள், மருத்துவ கருவிகள், சிகிச்சை நடைமுறைகளின் மூலம் உலகத்திலேயே சிறந்த ஆரோக்கிய சேவையை நோயாளிகள் பெறும்வண்ணம் அப்போலோ ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பெரும் முதலீடு செய்து வருகிறது. அப்போலோ மருத்துவமனைகள் குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளைத் தந்து வருகின்றனர்.