சீரகம் ஆன்ட்டிஆக்சிடன்ட், ஆன்ட்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகளைக் கொண்டது. வயிறு உப்பசத் தொந்தரவால் சிரமப்படுபவர்களுக்கு இது நல்ல மருந்தாகும்.
சீரகத்தை தினமும் உட்கொள்வதால் வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் போகும்.
சீரகத்தின் நன்மை நமக்கு முழுமையாகக் கிடைக்க அன்றாடம் காலையில் ஜீரக் தண்ணீர் அருந்துங்கள். ஒன்றரை கோப்பை தண்ணீரில் ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து அதில் அரை டீஸ்பூன் தேன் சேர்க்கவும். இப்போது அதை 5 முதல் 6 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். தீயை மிதமாக வைத்து இதனைச் செய்யவும். பின்னர் 5 நிமிடங்கள் இதனை மூடிவைக்கவும். பின்னர் வடிகட்டி குடிக்கவும். விரும்பினால் இன்னும் கொஞ்சம் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகத் தண்ணீரின் நன்மைகள்
1. ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்
உடலின் ஆரோக்கியத்தை பராமரிக்க ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மிகவும் முக்கியம். இந்த ஆக்ஸிஜனேற்றிகள் தான் உயிரணுக்களில் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடவும், உடலில் இருந்து ப்ரீ ரேடிக்கல்களை அகற்றவும், தீவிர நோய்களைத் தடுக்கவும் செய்கின்றன. சீரகத்தில் அபிஜெனின், லுட்டியோலின் ஆகிய கூறுகள் இருக்கின்றன. இவை ப்ரீ ரேடிக்கல்களை அகற்ற வெகுவாக உதவுகின்றன.
2.ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்
சீரகத்தில் ஹைபோக்ளைசிமிக் உள்ளது. இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வெகுவாக உதவுகிறது
3.கொழுப்புச் சத்தைக் கட்டுப்படுத்துகிறது
சீரகம் கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கிறது. இதில் ஹைபோலிபிடெமிக் காரணிகள் உள்ளன. இது ரத்தத்தில் எல்டிஎல் கொழுப்பைக் கட்டுப்படுத்துகிறது.
4.இரிட்டபிள் பவுல் சிண்ட்ரோம் குணமாகும்:
வயிற்று வலி, வயிற்று உப்புசம், உணவு உண்டவுடன் மலம் கழிக்க வேண்டும் எனும் உணர்வு, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சிலருக்கு தொடர்ந்து சில நாட்களுக்கு மலச்சிக்கலும், பிறகு தொடர்ந்து சில நாட்களுக்கு வயிற்றுப்போக்கும் மாறி மாறி ஏற்படும்.
அளவுக்கு மிஞ்சினால்..
அளவுக்கு மிஞ்சினால் அது எதுவாக இருந்தாலும் ஆபத்துதான். அதனால் அளவறிந்து சீரகத்தைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் சீரக விதைகளில் உள்ள அதிகப்படியான கார்மினேட்டிவ் ஏப்பங்களை அதிகளவில் ஏற்படுத்த காரணமாக அமைகின்றன. நமது உடலின் குடல் மற்றும் வயிற்றுப்பகுதியில் ஏற்படும் அதிகப்படியான வாயு வாய் வழியாக வெளியேறும் நிகழ்வையே நாம் ஏப்பம் என்று சொல்கிறோம். இந்த ஏப்பம், சிலருக்கு துர்நாற்றம் கொண்டதாகவும், சில தனிப்பட்ட சத்தங்களை கொண்டதாகவும் இருக்கும். ஏப்பம் விடுவது பெரிய பிரச்சினை அல்ல என்றபோதிலும், சில நேரங்களில் நம்மை அதிக சங்கடத்திற்கு உள்ளாக்கி விடும் என்பதை மறுக்க இயலாது.