இரவில் நன்றாக உறங்குபவர்கள் என்றாலும் காலையில் எழுந்திருக்கும்போது உடலின் சில பகுதியோ அல்லது மொத்தமுமே அதிக வலி எடுக்கத் தொடங்கும்.. உடலில் தெம்பு இல்லை..உடல் அயற்சி காரணம் என பல காரணங்கள் இதற்குச் சொல்லப்பட்டாலும் குறிப்பிட்ட சில சிறிய காரணங்களை நாம் கவனிக்கத் தவறுவதாலேயே இது ஏற்படுகிறது எனலாம்...


படுத்து உறங்கும் வாகு


உங்கள் மோசமான உறங்கும் வாகு உடல் வலிகளை ஏற்படுத்தும். உங்கள் வயிறு அல்லது தொப்பை பக்கத்தில் தூங்குவது முதுகு மற்றும் கழுத்து வலியை ஏற்படுத்தும். நீங்கள் குறைந்தது 10-12 மணி நேரத்திற்கும் மேலாக தூங்கினால் கடுமையான முதுகுவலியை உணரலாம்.


மோசமான தரமற்ற மெத்தை


உங்கள் உடல் ஏன் வலிக்கிறது என்பதற்கான முக்கியக் காரணமாக உங்கள் தரமற்ற மெத்தை இருக்கலாம். உங்கள் தலை, தோள்கள் மற்றும் பின்பக்கம் ஆகியவை தூங்கும்போது சீரான நிலையில் இருக்க வேண்டும். உங்கள் மெத்தை மென்மையாக இருந்தால், தூங்கும்போது அது உங்களை உள்ளிழுக்கும் இது உங்கள் உடல் வலிக்கு ஒரு காரணமாக இருக்கலாம்.


பருமனாக இருத்தல்


கூடுதல் எடையை சுமப்பது தூக்கத்தின் தரத்தை கடுமையாக பாதிக்கும் தூக்க சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது. அதிக எடையுடன் இருப்பதால், நீங்கள் எழுந்தவுடன் உங்கள் உடல் வலிக்கிறது, அதிக எடை உங்கள் முதுகு மற்றும் கழுத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, வலியை ஏற்படுத்துகிறது.


உடற்பயிற்சி


அதிக எடையை தூக்குவது அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வது உங்கள் உடலில் விறைப்பு அல்லது வலியை ஏற்படுத்தலாம். முக்கிய பயிற்சிகள் அல்லது கார்டியோ செய்யும் போது, தசை திசு நீண்டு அல்லது கிழிந்து பாதிப்புகளை உடலில் வலியை ஏற்படுத்துகிறது.






நோய்வாய்ப்படுதல்


தூக்கம் தொடர்பான உடல் வலி உடல் வீக்கத்தால் ஏற்படலாம். லைம் நோய், தைராய்டு, கீல்வாதம், ஸ்பான்டைலிடிஸ் அல்லது நாட்பட்ட சோர்வு உள்ளிட்ட சில அடிப்படை நோய்கள் உங்கள் உடலில் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.இது தவிர பல்வேறு காரணங்களால் உங்கள் உடலின் கீழ்ப்பகுதியில் வலி உண்டாவது இது போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம்.