மாதவிடாய் நேரத்தில் சில பெண்களுக்கு அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம். சில பெண்கள் வாந்தி எடுக்கும் உணர்வையும், வயிற்றுப்போக்கையும், தலைசுற்றலையும், மயக்க நிலையையும் உணர்வார்கள். மயங்கி விழுந்த பெண்களும் உண்டு.


ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வாலும், சினைமுட்டை உருவாகும் நிலையிலும் இது ஏற்படுகிறது. Endometriosis என்னும் நோயில் இது காணப்படும்.இதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். கர்ப்பப்பை கட்டிகளிலும், சினைமுட்டை கட்டிகளிலும் இது வரலாம். 


ஆனால் சாதாரண மாதவிடாய் வலியின் தாக்கத்தைக் குறைக்க சில பானங்களை அருந்தலாம். அவற்றின் சில இங்கே உங்களுக்காக..


பெப்பர்மின்ட் தேநீர்


பெப்பர்மின்ட் தேநீர் எளிமையான சுவையான மனம் நிறைந்த தேநீர். இதில் செடிகளுக்கே உரித்தான் ஃப்ளேவனாய்ட்ஸின் நன்மைகள் உள்ளன. இதில் உள்ள மனம் உங்களை காலை வேளையில் புத்துணர்ச்சி பெறச் செய்யும். குடலை சுத்தப்படுத்தும். முக்கியமாக மாதவிடாய் வலியில் இருந்து தப்பிக்கச் செய்யும்.


இஞ்சி தேநீர்


இஞ்சியில் ஜிஞ்ஜெரால் என்ற கூட்டுப்பொருள் உள்ளது. இது நீங்கள் ஹெவியான ஒரு உணவை உண்ட பின்னர் சிறந்த தீர்வைத் தரும். வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் மாதவிடாய் வழியால் ஏற்படும் வயிற்று வலியை இந்த இஞ்சி டீ சரி செய்யும்.


 சாமந்திப்பூ தேநீர்


சீமை சமாந்தி எனும் chamomile tea மன அழுதத்தை குறைக்க, தூக்கமின்மையில் இருந்து விடுபட உதவுகிறது. சீமை சாமந்தி பூக்களை நிழலில் உலர்த்தி காயவிடவும். நன்கு கொதிக்கும் நீரில் அடுப்பை ஆஃப் செய்துவிட்டு சீமை சாமந்தி பூவை போட்டு மூடி வைக்கவும். 2-3 நிமிடங்களில் வடிக்கட்டி தேன், வெல்ல சர்க்கரை சேர்த்து சாப்பிடாலம். இந்த தேநீருடன் உடன் எலுமிச்சை பழச் சாறு சிறிது சேர்த்து பருகினால், உற்சாகத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். அது மட்டுமல்லாது வாயுத் தொல்லை, உடல் உப்புசத்தை போக்குகிறது. மாதவிடாய் வலி தாங்க முடியாமல் தவிப்போர் இதனை அருந்தலாம்.


கிரீன் ஸ்மூத்தி


நீங்கள் காய்கறிகள் மற்றும் பழங்கள் நிரம்பிய காலை கிரீன் ஸ்மூத்திகளை விரும்புபவராக அவற்றை நிச்சயம் தேர்வு செய்து கொள்ளலாம். இவை உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த சர்க்கரையையும் குறைக்கிறது. நார்ச்சத்து நிரம்பிய கிரீன் ஸ்மூத்தியை தயார் செய்ய கேல் (Kale) அல்லது கீரை ( spinach), செலரி, வாழைப்பழம் மற்றும் சியா விதைகளைப் பயன்படுத்த பரிந்துரை செய்கிறார்கள். இது மாதவிடாய் நேரத்தில் வயிற்று வலியைக் கட்டுப்படுத்துகிறது.


லவங்கப் பட்டை தேநீர்:


லவங்கப் பட்டைத் தூளைச் 1/4 டீஸ்பூன் சேர்த்து, அரை கப் தண்ணீரில் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதனோடு 1 டீஸ்பூன் தேன் சேர்த்து, சற்றே சூடு ஆறியவுடன் காலையில் வெறும் வயிற்றில் பருகவும். அதிகாலையில் இந்த தேநீரை வெறும் வயிற்றில் பருகுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் மென்ஸ்ட்ருவல் க்ராம்ப்ஸை சரி செய்யும்.