கேல் கீரையில் சத்துக்கள் அதிகமாக இருப்பதால் ‘சூப்பர் ஃபுட்’ என்றழைக்கப்படுகிறது. கீரை வகைகளே ஆரோக்கியமிக்கவைதான். இருப்பினும், இந்த கேல் கீரையில் ஊட்டச்சத்து அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கேல் கீரை
காலிஃப்ளாவர், கோஸ் ரகங்களை போல கேல் கீரை brassica oleracea வகையைச் சேர்ந்தது. பல வண்ணங்களில் கேல் கீரைகள் கிடிஅக்கும். க்ளோரோபில், கால்சியம், இரும்புச்சத்து நிறைந்தது. சீரற்ற ஹார்மோன் சுரப்பு, கொழுப்பு மேலாண்மையில் கேல் கீரை சிறந்ததாக கூறப்படுகிறது.
ஒரு கப் கேல் கீரையில் ஒரு நாளைக்குத் தேவைப்படும் அளவில் 5 கிராம் நார்ச்சத்து, 15 சதவீதம் கால்சியம், வைட்டமின் பி6, 40 சதவீதம் மக்னீசியம், 180 சதவீதம் வைட்டமின் ஏ, 200 சத வீதம் வைட்டமின் சி மற்றும் 1020 சதவீதம் வைட்டமின் கே ஆகியவை இருக்கின்றன. மேலும் வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் ஆகியவையும் குறைந்த அளவில் இருக்கின்றன. இதில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை என்றும் இளமையாக இருக்க உதவுகிறது. இதில் கலோரி குறைவு என்பதால் கெட்ட கொழுப்பு சேரும் என்ற பேச்சுக்கே இடமில்லை.
கேல் கீரையில் சாலட் செய்து சாப்பிடலாம்.
கேல் கீரை quinoa
கேல் கீரையுடன் quinoa -சேர்த்து சாப்பிடுவது நல்லது. அதிக நார்ச்சத்து நிறைந்த உணவு,
சிறுதானிய கேல் கீரை சூப்
சிறுதானியம் ஏதாவது ஒன்றுடன் கேல் கீரை சேர்த்து சூப் செய்து சாப்பிடலாம்.
வெள்ளரி கேல் கீரை சாலட்
வெள்ளிக்காய், நறுக்கிய கேல் கீரை, சேர்த்து சாலட் செய்யதும். கேல் கீரையை எண்ணெயில் வதக்கி இதோடு சேர்த்துக்கொள்ளலாம்.
அதோடு, இதை வைத்து ஜூஸ் செய்தும் சாப்பிடலாம்.
அன்னாசி கேல் கீரை ஸ்மூத்தி
தேவையான பொருட்கள்
கேல் கீரை - 2 கப்
தண்ணீர் - 2 கப்
நறுக்கிய அன்னாசி பழம் - 2 கப்
வாழைப்பழம் - 1
தேங்காய எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
தேங்காய் எண்ணெய், கேல் கீரை, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். கேல் நன்றாக அரைந்ததும் இதோடு வாழைப்பழம், அன்னாசி சேர்த்து அரைக்கவும். பேல் ஸ்மூத்தி ரெடி. இதில் தேங்காய் பால் சேர்த்து தயாரிக்கலாம்.
உடல் எடை குறைய
உடல் எடை குறைக்க எண்ணம் இருப்பவர்கள் இதை டயட்டில் சேர்த்து கொள்ளலாம். குறைந்த கலோரிகள் உதவும். நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகப்படியாக நிறைந்துள்ளது, இது பசியை குறைத்து, நீண்ட நேரம் நிறைவாக உணர வைக்கிறது.
உடல் எடை சீராக பராமரிக்க விரும்புவோர் தினமும் இக்கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறைக்கும்.